

கள்ளக்குறிச்சி எஸ்.வி.எஸ். மருத் துவக் கல்லூரி மாணவிகள் மோனிஷா, சரண்யா, பிரியங்கா ஆகியோர் கடந்த ஜனவரியில் கல்லூரி அருகில் உள்ள கிணற் றில் இருந்து சடலமாக மீட்கப்பட் டனர்.
இது தொடர்பாக சின்ன சேலம் போலீஸார் வழக்கு பதிவு செய்து கல்லூரி தாளாளர் வாசுகி, அவரது மகன் ஸ்வாகர் வர்மா மற்றும் உதவியாளர் பெரு.வெங்கடேஷ் ஆகியோரை கைது செய்தனர். இந்த மூவருக்கும் கீழ் நீதிமன்றம் ஜாமீ்ன் தர மறுத்ததால், ஜாமீன் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். மனுதாரர்கள் சார்பில் மூத்த வழக்கறிஞர் ஆர்.சி.பால்கனகராஜ் ஆஜராகி, “தற்கொலை செய்துகொண்ட மாணவிகள் எழுதி வைத்த கடிதத்தின் அடிப்படையிலேயே இந்த மூவர் மீதும் வழக்கு பதியப்பட்டுள்ளது. எனவே அவர் களுக்கு ஜாமீன் தர வேண்டும்” என வாதிட்டார்.
இறந்த மாணவிகள் மோனிஷா மற்றும் சரண்யா ஆகியோரது பெற்றோர் சார்பில் ஆஜரான வழக் கறிஞர் ரஜினி, ‘‘இது தற் கொலையே கிடையாது. கல்லூரி நிர்வாகத்தின் தூண்டுதலின் பேரில்தான் மாணவிகள் மூவரும் ஒன்றாக மர்மமான முறையில் இறந்துள்ளனர். அவர்கள் தற் கொலை செய்துகொள்ளும் அள வுக்கு கோழை கிடையாது. ஆகவே இந்த வழக்கு ஒரு முடிவுக்கு வரும் வரை அவர்களுக்கு ஜாமீன் தரக்கூடாது” என வாதி்ட்டார்.
அரசு தரப்பில் ஆஜரான தலைமை குற்றவியல் வழக்கறிஞர் சண்முகவேலாயுதம், ‘‘வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு விசா ரணை நடந்து கொண்டிருக்கிறது. இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் வரையா வது அவர்களுக்கு ஜாமீன் தரக் கூடாது” என வாதிட்டார்.
இதையடுத்து நீதிபதி கே.கல் யாணசுந்தரம் தனது உத்தரவில், குற்றம் சாட்டப்பட்டுள்ள கல்லூரி தாளாளர் வாசுகிக்கு ஜாமீன் மறுக்கப்படுகிறது. அதே நேரம், தாளாளரின் மகன் ஸ்வாகர் வர்மா மற்றும் உதவியாளர் பெரு.வெங்கடேஷ் ஆகியோருக்கு தலா ரூ.10 ஆயிரம் பிணையு டன் நிபந்தனை ஜாமீன் வழங் கப்படுகிறது. இருவரும் இந்த வழக்கில் மறு உத்தரவு பிறப்பிக் கும் வரை தினமும் காலை 8 மணி மற்றும் மாலை 5 மணிக்கு சிபிசிஐடி போலீஸார் முன்பு ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என உத்தரவிட்டார்.
விழுப்புரம் நீதிமன்றத்தில்
இதற்கு முன்னதாக நேற்று காலையில் விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் வாசுகி, ஸ்வாகர் வர்மா. பெரு.வெங்க டேஷ் போலீஸ் பாதுகாப்புடன் ஆஜர்படுத்தப்பட்டனர். வழக்கை விசாரித்த நீதிபதி சுபா அன்புமணி, அவர்களின் நீதிமன்ற காவலை மேலும் 15 நாட்கள் நீட்டித்து, வரும் 17-ம் தேதி வரை கடலூர் மத்திய சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.