வாக்காளர் பட்டியலில் தவறு நடந்துள்ளது என்பதற்காக உள்ளாட்சித் தேர்தலை தள்ளி வைக்க முடியாது: உயர் நீதிமன்ற நீதிபதிகள் கருத்து

வாக்காளர் பட்டியலில் தவறு நடந்துள்ளது என்பதற்காக உள்ளாட்சித் தேர்தலை தள்ளி வைக்க முடியாது: உயர் நீதிமன்ற நீதிபதிகள் கருத்து
Updated on
1 min read

வாக்காளர் பட்டியலில் தவறு நடந்துள்ளது என்பதற்காக உள்ளாட்சித் தேர்தலை தள்ளி வைக்க முடியாது என கருத்து தெரிவித்துள்ள உயர் நீதிமன்ற நீதிபதிகள், வாக்காளர் பட்டியலில் உள்ள தவறுகளை திருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளனர்.

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் தாலுகா இச்சிபுத்தூர் கிராமத்தில் உள்ள 8-வது வார்டில்வாக்காளர் பட்டியலில் குளறுபடிகள் நடந்துள்ளன என்றும், தவறுகளை திருத்தி புது வாக்காளர் பட்டியல் வெளியிடும் வரை தேர்தலை நடத்த தடை விதிக்க வேண்டும் எனக் கோரி அதே கிராமத்தைச் சேர்ந்த சீனிவாசன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதிபி.டி.ஆதி கேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, ‘‘8-வது வார்டுபெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், மற்ற வார்டில் உள்ளபெண்கள், இறந்தவர்களின் பெயர்கள் என 120 பேரின் பெயர்கள் 8-வது வார்டு வாக்காளர் பட்டிய லில் சேர்க்கப்பட்டுள்ளது. அதை சரிசெய்யாமல் தேர்தலை நடத்தக் கூடாது என மாநில தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்’’ என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

அப்போது நீதிபதிகள், ‘‘வரும்அக்.6 அன்று உள்ளாட்சி தேர்தலைநடத்துவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன. இந்த நேரத்தில் வாக்காளர் பட்டியலில் தவறு உள்ளது என்பதற்காக உள்ளாட்சித் தேர்தலை தள்ளி வைக்க உத்தரவிட முடியாது’’ எனகருத்து தெரிவித்தனர்.

மேலும் மனுதாரர் குறிப்பிட்டுள்ள தவறுகளை திருத்த அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என மாநில தேர்தல்ஆணையத்துக்கு உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in