

செங்கல்பட்டு மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டம் சென்னை குரோம்பேட்டையில் நேற்று நடைபெற்றது.
இதில், செங்கல்பட்டு மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி பேசியதாவது:
திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு உரிய இடங்கள் கிடைக்கவில்லை என்று பலரும் வருத்தம் தெரிவித்தனர். கூட்டணி என்றாலே போதுமான இடங்கள் கிடைக்கவில்லை என்ற வருத்தம் இருக்கத்தான் செய்யும். அரசியல் எதிரிகளை, கொள்கை எதிரிகளை வீழ்த்த வேண்டும் என்று தேர்தல் களத்தில் இறங்கி பணியாற்றத் தொடங்கி விட்டால் அந்த வருத்தம் காணாமல் போய்விடும்.
பொறுப்பேற்ற நாளில் இருந்து திமுக அரசு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. தேர்தல் வாக்குறுதிகள் பலவற்றை இந்த குறுகிய காலத்திலேயே திமுக அரசு நிறைவேற்றியுள்ளது. திமுககூட்டணிக்கு மக்களிடம் நல்ல ஆதரவு உள்ளது. ஊரக உள்ளாட்சித் தேர்தலில் இது எதிரொ லிக்கும். 100 சதவீத இடங்களிலும் திமுக கூட்டணி வெல்லும்
இவ்வாறு அவர் பேசினார்.