

பிரதமர் மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:
பெல்ஜியம் நாட்டின் பிரஸல்ஸ் நகரில் சமீபத்தில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவங்களில், தமிழ கத்தை பூர்வீகமாகக் கொண்ட ராகவேந்திரன் கணேசன் காணா மல் போனவர்கள் பட்டியலில் இடம் பெற்றிருப்பதை தங்கள் கவனத்துக்கு கொண்டு வருகிறேன்.
தமிழகத்தைச் சேர்ந்த அவரது பெற்றோரின் மூத்த மகனான ராகவேந்திரன் கணேசனின் இளம் மனைவிக்கு தற்போது முதல் குழந்தை பிறந்துள்ளது. அவர் தற்போது சென்னையில் வசிக்கிறார். அவரது குடும்ப உறுப்பினர்கள் ராகவேந்திரன் கணேசனின் வார்த்தைகளை கேட்கவும், அவர் பாதுகாப்பாக இருக்கிறாரா என்பதை அறிவதற் காகவும் மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளனர்.
எனவே, ராகவேந்திரன் கணே சனை விரைவில் கண்டறிய, அவரது குடும்பத்தினருக்கு தேவையான உதவிகளை செய்யும்படி மத்திய வெளியுறவுத் துறை மற்றும் பிரஸல்ஸில் உள்ள இந்திய தூதரகத்துக்கு அறிவுறுத்த வேண்டும். இது மிகுந்த இன்னலில் இருக்கும் கணேசனின் குடும்பத்துக்கு சிறந்த உதவியாகவும், ஆறுதலாகவும் இருக்கும்.
இவ்வாறு அக்கடிதத்தில் முதல்வர் ஜெயலலிதா கூறியுள் ளார்.