

ஆண்டிபட்டி தொகுதியில் தங்க தமிழ்செல்வன் எம்எல்ஏவும், அமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் எதிரும், புதிருமாக செயல்பட்ட னர். இதன் காரணமாக தங்கதமிழ் செல்வன் நடத்தும் கூட்டங்களில் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொள் வதில்லை எனக் கூறப்பட்டது. இதற்கிடையில், சமீபத்தில் தேனி மாவட்ட ஜெயலலிதா பேரவைச் செயலாளராக தங்கதமிழ்செல் வன், நியமிக்கப்பட்டார்.
இதையடுத்து, தேனியில் ஜெய லலிதா பேரவை நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம், அவரது தலைமையில் நேற்று நடைபெறுவ தாக அறிவிக்கப்பட்டது. ஆனால் ஓ.பன்னீர்செல்வம் வரவில்லை. அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் மட்டும் வந்திருந்தார்.
தங்கதமிழ்செல்வன் ஆதரவா ளர்கள் சிலர் கூறும்போது, ‘ஓபிஎஸ் கூட்டத்தை புறக்கணித்துவிட்டார். அவரை வரவேற்க நீண்டநேரம் காத்திருந்த தங்கதமிழ்செல்வன் ஏமாற்றமடைந்தார்’ என்றனர்.
கட்சியின் முக்கிய நிர்வாகி ஒருவரிடம் கேட்டபோது, முக்கிய வேலை காரணமாக ஓபிஎஸ் சென்னை சென்று விட்டார். தான் கலந்துகொள்ள முடியாததால், கட்சியின் அனைத்து நிர்வாகி களையும், தொண்டர்களையும் கலந்துகொள்ளும்படி கூறினார்’ என்று தெரிவித்தார்.