ஊரக உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரத்துக்காக 9 மாவட்டங்களில் கே.எஸ்.அழகிரி இன்றுமுதல் சுற்றுப்பயணம்: காங்கிரஸ் கட்சி அறிவிப்பு

ஊரக உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரத்துக்காக 9 மாவட்டங்களில் கே.எஸ்.அழகிரி இன்றுமுதல் சுற்றுப்பயணம்: காங்கிரஸ் கட்சி அறிவிப்பு
Updated on
1 min read

ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் 9 மாவட்டங்களில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி இன்றுமுதல் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார்.

இது தொடர்பாக காங்கிரஸ் ஊடகப் பிரிவு மாநிலத் தலைவர் ஆ.கோபண்ணா நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் 9 மாவட்டங்களில் செப்டம்பர் 29(இன்று) முதல் அக்டோபர் 3-ம் தேதிவரை சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார். 9 மாவட்டங்களிலும் காங்கிரஸ் மாவட்ட நிர்வாகிகளைச் சந்தித்து பிரச்சாரம் குறித்து ஆய்வு செய்கிறார்.

உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், முன்னணித் தலைவர்கள், மாநில, மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள், முன்னணி அமைப்புகள், துறைகளின் நிர்வாகிகள் இந்தக் கூட்டங்களில் பங்கேற்க வேண்டும்.

புதன்கிழமை (இன்று) காலை 10 மணிக்கு குரோம்பேட்டை ஆனந்தாதிருமண மண்டபத்தில் செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தில் கே.எஸ்.அழகிரி பங்கேற்கிறார். காலை 11 மணிக்கு காஞ்சிபுரம் மாவட்டம் பெரும்புதூர், பகல் 1 மணிக்கு ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர், மாலை 4 மணிக்கு வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு, மாலை 6 மணிக்கு திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் ஆகிய இடங்களில் நடைபெறும் காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்கிறார்.

வியாழக்கிழமை (நாளை) காலை 11 மணிக்கு விழுப்புரம் மாவட்டம் செஞ்சி, பகல் 1 மணிக்குவிழுப்புரம், மாலை 4 மணிக்கு கள்ளக்குறிச்சி, அக்டோபர் 3-ம்தேதி காலை 11 மணிக்கு திருநெல்வேலி, மாலை 5 மணிக்கு தென்காசி ஆகிய இடங்களில் நடைபெறும் காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தில் கே.எஸ்.அழகிரி பங்கேற்கிறார்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in