

தமிழகத்தில் ஆண்டுக்கு சராசரியாக சுமார் ஒரு லட்சம் பேர் மாரடைப்பால் பாதிக்கப் படுகின்றனர். மற்ற நாடுகளில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மாரடைப்பு ஏற்படுகிறது. இங்கு 40 வயதிலேயே மாரடைப்பு ஏற்படுகிறது. இந்தியாவில் இருதய நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழப் பவர்களில் 50 சதவீதம் பேர் 50 வயதுக்கு கீழ் உள்ளவர்கள்.
மாரடைப்பு பாதிப்பை தவிர்க்க தமிழக அரசு செயல்படுத்திவரும் திட்டம் குறித்து கோவை அரசு மருத்துவமனையின் இருதயவியல் துறை டாக்டர் ஜெ.நம்பிராஜன் கூறியதாவது:
அரசு மருத்துவமனைகளுக்கு மாரடைப்புடன் வரும் நோயாளி களுக்கு விரைந்து சிகிச் சையளிக்க‘ஸ்டெமி’ திட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, 5 மாவட்டங்களுக்கு மண்டல மருத்துவமனையாக செயல்பட்டு வருகிறது.
இதன்கீழ், முதன்மை சிகிச்சைமையங்களாக குன்னூர், தாராபுரம், கோபிசெட்டிபாளையம், காங்கயம், மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, சத்தியமங்கலம், உடுமலைப்பேட்டை, ஈரோடு, பல்லடம், கோத்தகிரி, கூடலுார், மடத்துக்குளம், சூலூர், அன்னூர் ஆகிய இடங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளும், கிளை மையங்களாக கோவை இஎஸ்ஐ மற்றும் நீலகிரி, கரூர், பெருந்துறை, திருப்பூர் ஆகியபகுதிகளில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளும் செயல்படுகின்றன.
இம்மருத்துவமனைகளை இணைத்து, வாட்ஸ்அப் குழு உருவாக்கப்பட்டுள்ளது. கிளை மருத்துவமனைக்கு மாரடைப் புடன், அபாய கட்டத்தில் வரும் நோயாளிகள் குறித்த தகவல்கள், உடனுக்குடன் இக்குழுவில் பதிவிடப்படும்.
குழுவில் உள்ள டாக்டர்கள், நோயாளிக்கு தேவையான சிகிச்சை குறித்து ஆலோசனை களை வழங்குவர்.
மாரடைப்பு வந்தவுடன் ரத்தக்குழாய் அடைப்பை மருந்து மூலம்கரைக்க வேண்டுமெனில் 6 மணிநேரத்துக்குள் அந்த மருந்தை செலுத்த வேண்டும்.
தேவைப்பட்டால் 24 மணி நேரத்துக்குள், அரசு மருத்துவ மனையில் நோயாளியை அனு மதித்து ஆஞ்சியோகிராம் சிகிச்சை அளிக்கவும் நடவடிக்கை எடுக்கப் படுகிறது.
நோயாளியின் ரத்தக்குழாய் அடைப்பை நீக்க ‘ஸ்டென்ட்’ வைக்கப்படுகிறது.
ஒன்றுக்கும் மேற்பட்ட அடைப்புஇருந்தால் பைபாஸ் அறுவை சிகிச்சை அளிக்க பரிந்துரை செய் யப்படுகிறது.
முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின்கீழ் இந்த சிகிச்சைகள் இலவசமாக மேற்கொள்ளப்படுகின்றன.
தற்போது இளைஞர்களுக்கு அதிகமாக மாரடைப்பு ஏற்படுகிறது. கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நோயாளிகளில் 25 சதவீதம் பேர் 30 வயதுக்கு கீழ் உள்ள இளைஞர்களாக உள்ளனர்.
அதுகுறித்து தனியே ஆராய்ச்சி நடைபெற்று வருகிறது. இதில், 40 வயதுக்கு கீழ் உள்ள 300 பேரின் விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.