

சென்னை ஜாம்பஜாரில் கோயில் முன்பு 3 ஐம்பொன் சிலைகளை வைத்துவிட்டுச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
ஜாம்பஜார் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட ஆறுமுகப்பா தெருவில் முத்துமாரியம்மன் கோயில் உள்ளது. அதன் முன்பு நேற்று மதியம் ஐம்பொன்னால் ஆன 3 சிலைகளை அடையாளம் தெரியாத நபர்கள் வைத்துவிட்டுச் சென்றுள்ளனர். இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக இதுகுறித்து ஜாம்பஜார் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலறிந்து ஆய்வாளர் ரோகிணி தலைமையிலான போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்தனர்.
தொடர்ந்து ஐம்பொன்னால் செய்யப்பட்ட அம்மன் சிலை, கிருஷ்ணர் சிலை, அன்னபூரணி சிலை மற்றும் 2 அடி சங்கு ஒன்றுஆகியவற்றை காவல் நிலையத்துக்கு எடுத்துச் சென்றனர்.
சிலைகளை கோயில் முன்பு வைத்துச் சென்றது யார்? எதற்காக இங்கு வைத்து சென்றனர்? இந்தசிலைகள் எங்கிருந்து கடத்தி கொண்டு வரப்பட்டது? சிலைகளை கோயிலில் இருந்து திருடியகொள்ளையர்கள் மன மாற்றம்ஏற்பட்டு ஜாம்பஜாரில் உள்ளகோயிலில் வைத்துச் சென்றார்களா? என பல்வேறு கோணங்களில் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
கண்காணிப்பு கேமரா
முதல் கட்டமாக அந்த பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகள் மூலம் சிலைகளை வைத்துச் சென்ற நபர்களை போலீஸார் தேடி ருகின்றனர்.