ராதாகிருஷ்ணன் தாக்கப்பட்ட வழக்கு: ஜெயேந்திரர் உள்ளிட்ட 9 பேரும் ஆஜராக சென்னை நீதிமன்றம் உத்தரவு

ராதாகிருஷ்ணன் தாக்கப்பட்ட வழக்கு: ஜெயேந்திரர் உள்ளிட்ட 9 பேரும் ஆஜராக சென்னை நீதிமன்றம் உத்தரவு
Updated on
1 min read

கடந்த 2002-ல் ராதாகிருஷ்ணன் என்பவர் தாக்கப்பட்ட வழக்கில் காஞ்சி சங்கரமடம் மடாதிபதி ஜெயேந்திரர் உள்ளிட்ட 9 பேரும் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.

சென்னை மந்தைவெளியை சேர்ந்த தொழிலதிபர் ராதாகிருஷ் ணன். இவரை, கடந்த 2002-ம் ஆண்டு செப்டம்பர் 20-ம் தேதி ஒரு மர்ம கும்பல் வீடு புகுந்து வெட்டியது. இதில் ராதாகிருஷ் ணன், அவரது மனைவி, வேலைக் காரர் ஆகியோர் படுகாயமடைந் தனர். இதுகுறித்து பட்டினப்பாக்கம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அப்போது, சோமசேகரகனபாடிகள் என்ற பெயரில் காஞ்சி சங்கரமடம் மடாதிபதி ஜெயேந்திரருக்கு எதிராகவும், அவர் மீது குற்றம் சுமத்தியும் அரசு அதிகாரிகள் பலருக்கு மொட்டை கடிதங்கள் சென்றன. இந்த கடிதங்களை ராதாகிருஷ்ணன்தான் அனுப்பு வதாக நினைத்து அவர் மீது இந்த தாக்குதல் நடந்திருப்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து ஜெயேந்திரர், கதிரவன், ரவிசுப்ரமணியன், சுந்தரேச அய்யர், ரகு, அப்பு, மீனாட்சி சுந்தரம், ஆனந்தன், லட்சுமணன், பூமிநாதன், கண்ணன், குமார் ஆகிய 12 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டது. இந்த வழக்கு சென்னை மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. வழக்கு விசாரணையின்போது அப்பு இறந்தார். கதிரவன் படுகொலை செய்யப்பட்டார். ரவிசுப்ரமணியம் அப்ரூவராக மாறினார். இதனால் ஜெயேந்திரர் உள்ளிட்ட 9 பேர் மீதான வழக்கு மட்டும் தனியாக பிரிக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இந்த வழக்கில் போலீஸ் தரப்பில் 55 பேர் சாட்சியம் அளித்தனர். 220 சாட்சி ஆவணங்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கை நேற்று விசாரித்த நீதிபதி ராஜமாணிக்கம், குற்றம் சாட்டப்பட்டுள்ள ஜெயேந்திரர் உள்ளிட்ட 9 பேர் மீதும் குற்றச்சாட்டு பதிவு செய்வதற்காக, வரும் மார்ச் 28-ம் தேதி நேரில் ஆஜராக உத்தரவிட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in