வேளாண் சட்டங்களை திரும்ப பெறக் கோரி நாடு தழுவிய முழு அடைப்பு- தமிழகம் முழுவதும் சாலை, ரயில் மறியல்: புதுவையில் கடைகள் அடைப்பு; ஆட்டோக்கள் ஓடவில்லை

வேளாண் சட்டங்களை திரும்ப பெறக் கோரி நாடு தழுவிய முழு அடைப்பு- தமிழகம் முழுவதும் சாலை, ரயில் மறியல்: புதுவையில் கடைகள் அடைப்பு; ஆட்டோக்கள் ஓடவில்லை
Updated on
1 min read

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி தமிழகம் முழுவதும் நேற்று சாலை மற்றும் ரயில் மறியல் போராட்டங்கள் நடந்தன. சென்னையில் கே.பாலகிருஷ்ணன், முத்தரசன், திருமாவளவன் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் உட்பட மாநிலம் முழு வதும் ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.

புதுச்சேரியில் கடைகள் அடைக்கப் பட்டிருந்தன. தனியார் பேருந்துகள், ஆட்டோக்கள் முழுமையாக இயங்க வில்லை.

வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி செப்டம்பர் 27-ம் தேதி நாடு தழுவிய முழு அடைப்புப் போராட்டத் துக்கு ஐக்கிய விவசாயிகள் முன்னணி அழைப்பு விடுத்திருந்தது. இதற்கு தமிழகத்தில் திமுக, காங்கிரஸ், மதிமுக, விசிக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் (எம்.எல்.) உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்திருந்தன.

அதன்படி, நேற்று காலை 10 மணி அளவில் சென்னை அண்ணா சாலையில் மறியல் போராட்டம் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், காங்கிரஸ் மாநில துணைத் தலைவர் பொன்.கிருஷ்ணமூர்த்தி, இந்திய கம்யூ னிஸ்ட் (எம்.எல்) மாநிலச் செயலாளர் என்.கே.நடராஜன், தொமுச பேரவை பொருளாளர் கி.நடராஜன் உள்ளிட்ட ஆயிரத்துக்கும் அதிகமானோர் பங்கேற்றனர். பின்னர் அனைவரையும் போலீஸார் கைது செய்தனர்.

சென்னை கிண்டி அஞ்சல் அலுவலகம் முன்பு நடைபெற்ற போராட்டத்தில் மார்க்சிஸ்ட் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். சென்னை எழும்பூர் மற்றும் தாம்பரத்தில் ரயில் மறியல் நடந்தது.

இதேபோல் மதுரை, கோவை, திருச்சி, நாமக்கல், திருப்பூர், திருநெல்வேலி, விழுப்புரம் உள்ளிட்ட தமிழகத்தின் அனைத்து மாவட்டத் தலைநகரங்கள், முக்கிய நகரங்கள், ஒன்றியங்கள் என்று 500-க்கும் அதிகமான இடங்களில் சாலை, ரயில் மறியல் போராட்டங்களும் மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டங்களும் நடந்தன. மாநிலம் முழுவதும் மறியலில் ஈடுபட்ட 23 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டு, மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

புதுச்சேரி

புதுச்சேரியில் தனியார் பேருந்து கள், டெம்போ, ஆட்டோக்கள் முற்றிலு மாக இயங்கவில்லை. வணிக நிறுவனங்கள், கடைகள், மார்க்கெட்கள், தொழிற்சாலைகள் மூடப்பட்டிருந்தன. பெரும்பாலான தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது. திரை யரங்குகளில் பகல் காட்சிகள் ரத்து செய்யப்பட்டன. 15-க்கும் மேற்பட்ட இடங்களில் மறியல் நடந்தது. இதில் ஆயிரக்கணக்கானோர் கைதாகி விடு விக்கப்பட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in