

மேல்மருவத்தூர் ஊராட்சி மன்றத் தலைவராக பங்காரு அடிகளார் மனைவி லட்சுமி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
மேல்மருவத்தூர் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு பங்காருஅடிகளாரின் மனைவி லட்சுமி வேட்புமனு தாக்கல் செய்தார். இவர்இதற்கு முன் இரு முறை மேல்மருவத்தூர் ஊராட்சி மன்றத் தலைவராக இருந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் ஊராட்சி மன்றத் தலைவர் பதவி பட்டியலினத்தவருக்கு ஒதுக்கப்பட்டது. இதனால் இவர் போட்டியிடவில்லை.
இந்தத் தேர்தலில் மேல்மருவத்தூர் ஊராட்சி மன்றத் தலைவர் பதவி பொதுப் பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து லட்சுமி பங்காரு அடிகளார் வேட்புமனு தாக்கல் செய்தார். அவரை எதிர்த்து யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாததால் அவர் போட்டியின்றி ஊராட்சி மன்றத் தலைவராக தேர்வானார்.
வெற்றி சான்றிதழ்
இதனைத் தொடர்ந்து அவர் வெற்றி பெற்றதற்கான அறிவிப்பு சான்றிதழை உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் பரணிதரன் ஊராட்சி மன்ற அலுவலகம் சென்று லட்சுமிபங்காரு அடிகளாரிடம் வழங்கினார். அவர் லட்சுமி பங்காரு அடிகளாருக்கு பூங்கொத்து கொடுத்தும் வாழ்த்து தெரிவித்தார்.