

முதல்வர் நாற்காலியைக் காப்பாற்றிக்கொள்ள பாரதிய ஜனதாவிடம் ரங்கசாமி சரணாகதி அடைந்துள்ளார் என்று புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி இன்று ஒரு வீடியோ வெளியிட்டார்.
அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது:
புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சி அமைத்து ஐந்து மாதங்கள் ஆகிறது. ஆனால் மக்களுக்கு எந்தவிதப் பலனும் கிடைக்கவில்லை. மாநிலத்திற்கு தேவையான நிதியை மத்திய அரசாங்கத்திடமிருந்து பெறமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது .
அரசியல் ரீதியாக என்.ஆர்.காங்கிரஸ் பாரதிய ஜனதாவிடம் சரணாகதி அடைந்துள்ளது. அலங்கோலமான ஆட்சியை ரங்கசாமி நடத்தி வருகிறார்.எது நடந்தாலும் பரவாயில்லை தனது முதல்வர் நாற்காலியைக் காப்பாற்றிக்கொள்ள பாரதிய ஜனதாவிடம் சரணாகதி அடைந்துள்ளார்.
இந்தச் சூழலில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகிறது. இந்த உள்ளாட்சித் தேர்தல் விதிமுறைப்படி பாரபட்சமின்றி அனைத்து அரசியல் கட்சிகளும் பங்கேற்கும் வகையில் நடைபெற வேண்டும். அதனை அதிகாரிகள் திறம்பட நடத்த வேண்டும்.
இவ்வாறு அவர் வீடியோவில் தெரிவித்துள்ளார்.