

திமுக கூட்டணிக்கு பல்வேறு அமைப்புகள் ஆதரவு தெரிவித்து வருகின்றன. இதன் தொடர்ச்சியாக நேற்றும் அமைப்புகளின் நிர்வாகிகள் ஸ்டாலினை சந்தித்து ஆதரவு கடிதம் அளித்தனர்.
அமைப்புகளின் விவரம் வருமாறு: கொங்கு வேட்டுவ கவுண்டர் இளைஞர் நலச் சங்கம், அகில இந்திய பார்வர்டு பிளாக் (எஸ்.டி), வீரத் தமிழர் பேரவை, அனைத்து கல்லூரி மாணவர்கள் கூட்டமைப்பு, அனைத்து கிறிஸ்தவ மக்கள் ஒருங்கிணைப்பு மையம், தென்னாடு மூவேந்தர் கழகம், உலகத் தமிழர்கள் மாணவர்கள் சங்கம், தமிழ்நாடு செக்யூரிட்டி தொழிலாளர் முன்னேற்ற சங்கம், போயர் சமுதாய முன்னேற்ற சங்கம், அகில இந்திய கிறிஸ்தவர்கள் வாழ்வுரிமைக் கட்சி, தமிழ்நாடு தலித் மக்கள் கூட்டமைப்பு, அகில இந்திய சிறுபான்மை இளைஞர்கள் சமூக நீதிப்பேரவை, அம்பேத்கர் மக்கள் இயக்கம், மக்கள் முன்னேற்றக் கழகம், இந்திய குடியரசு கட்சி (ஜி.மூர்த்தி), தமிழ்நாடு காமராஜர் மக்கள் கட்சி, நாடார் மக்கள் இயக்கம், தலித் மாணவர் கூட்டமைப்பு, தமிழ்நாடு பாரத மக்கள் இயக்கம், ஆதிதிராவிடர் சங்கம், தமிழக இளைஞர் கட்சி. திமுக கூட்டணிக்கு இதுவரை 98 அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன.