தேர்தல் தேதி அறிவிக்கும் முன்னரே தேனி மாவட்டத்தில் பணிகள் மும்முரம்

தேர்தல் தேதி அறிவிக்கும் முன்னரே தேனி மாவட்டத்தில் பணிகள் மும்முரம்
Updated on
1 min read

தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிக்கும் முன்னரே, தேனி மாவட்டத்தில் தேர்தல் பணியில் வருவாய்த்துறை அலுவலர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டப் பேரவை தேர்தல் தேதிகள் விரைவில் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் தேர்தல் தேதி அறிவிக்கும் முன்னரே, தேனி மாவட்டத்தில் உரிமம் பெற்று துப்பாக்கிகளை வைத்திருப்போரிடம் இருந்து காவல்துறை துப்பாக்கிகளை பெற்று வருகிறது. மேலும் அனைத்து கட்சி நிர்வாகிகளுடன் தினந்தோறும் ஆலோசனைக் கூட்டம் நடத்தி, தேர்தல் நடத்தை விதிமுறைகளை விளக்கி வருகின்றனர்.

இந்நிலையில், தேனி மாவட்டத்தில் உள்ள 4 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான தேர்தல் அலுவலர்கள் நேற்று நியமி க்கப்பட்டனர். உத்தம பாளையம் கோட்டாட்சியர் ராசய்யா கம்பம் தொகுதிக்கும், கலால்துறை உதவி ஆணையர் காளிமுத்து போடி தொகுதிக்கும், சமூக பாதுகாப்புத் திட்டத்துக்கான சிறப்பு துணை ஆட்சியர் இளங்கோவன் ஆண்டிபட்டி தொகுதிக்கும், பெரியகுளம் (தனி) தொகுதிக்கு பெரியகுளம் கோட்டாட்சியர் ஆனந்தியும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதுதவிர உதவி தேர்தல் அலுவ லர்களாக ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும் தலா 2 பேர் வீதம் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து ‘தி இந்து’விடம் வருவாய்த்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியது:

தமிழக-கேரள எல்லையில் தேனி மாவட்டம் அமைந்துள்ளதால் இம் மாவட்டத்தில் இரட்டை வாக் காளர்கள் அதிகமாக உள்ளனர். இவர்களின் பெயர், முகவரி சேகரிக்கப்பட்டு தேனி மாவட்டத்தில் வசிக்காதவர்களின் பெயர்கள் நீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தேர்தல் தேதி அறிவித்த பின்னர், மற்ற பணிகளை மேற்கொள்ள போதிய கால அவகாசம் கிடைக்காமல் போய்விடும் என்பதால், முன்னரே பணிகள் தொடங்கப்பட்டுள்ளன என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in