

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் 7,251 உள்ளாட்சி அமைப்பு பதவிகளுக்கு 981 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 18,917 பேர் போட்டியிட உள்ளனர்.
தமிழகத்தில் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் உள்ளாட்சி அமைப்பு பதவிகளுக்கான தேர்தல் 2 கட்டகளாக நடைபெற உள்ளன. அக்டோபர் 6-ம் தேதி முதல் கட்டமாகவும், அக்டோபர் 9-ம் தேதி 2-ம் கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
இத்தேர்தலை முன்னிட்டு செப்டம்பர் 15-ம் தேதி வேட்புமனு தாக்கல் நடைபெற்றது. 22-ம் தேதி வேட்புமனு தாக்கல் கடைசி நாளாகும். 23-ம் தேதி மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்றது. 25-ம் தேதி மனுக்கள் வாபஸ் பெறப்பட்டன. இதையடுத்து, இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் 7,251 உள்ளாட்சி அமைப்பு பதவிகளுக்கான தேர்தலில் 23, 659 பேர் மனு தாக்கல் செய்திருந்தனர். இதில், 981 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். சிலரது மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது, சிலர் போட்டியில் இருந்து விலகுவதாக கூறி தங்களது வேட்பு மனுக்களை வாபஸ் பெற்றனர்.
இறுதியாக, வேலூர் மாவட்டத்தில் 6,547 பேர், ராணிப்பேட்டை மாவட்டத்தில் 6,085, திருப்பத்தூர் மாவட்டத்தில் 6,285 பேர் என மொத்தம் 18,917 பேர் தேர்தலில் போட்டியிட உள்ளனர்.
அதன்விவரம் வருமாறு:
வேலூர் மாவட்டம்:
வேலூர் மாவட்டத்தில் 2,478 உள்ளாட்சி அமைப்பு பதவிகள் உள்ளன. இந்த பதவிகளுக்கு 8,170 பேர் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர். அதில், 83 பேர் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. 1,224 பேர் வேட்பு மனுக்களை வாபஸ் பெற்றனர்.
316 பேர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். 11 இடங்களில் யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. இதையடுத்து இறுதியாக 6,547 வேட்பாளர்கள் களத்தில் போட்டியிடுகின்றனர்.
14 மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு 93 பேர் மனுதாக்கல் செய்திருந்தனர். அதில் 6 பேர் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. 17 பேர் வேட்புமனுவை திரும்ப பெற்றனர். களத்தில் 70 பேர் உள்ளனர்.
138 ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு 741 பேர் மனுதாக்கல் செய்திருந்தனர். அதில் 12 பேர் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. 224 பேர் மனுவை வாபஸ் பெற்றனர். 2 பேர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். 503 பேர் தேர்தல் களத்தில் உள்ளனர்.
247 ஊராட்சிமன்ற தலைவர் பதவிக்கு 1,192 பேர் மனுதாக்கல் செய்திருந்தனர். 13 பேர் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. 343 பேர் வேட்புமனுவை வாபஸ் பெற்றனர். 16 பேர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள 820 பேர் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.
ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர் 2,079 பதவிக்கு 6,144 பேர் மனுதாக்கல் செய்திருந்தனர். 52 பேரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. 640 பேர் வேட்பு மனுவை வாபஸ் பெற்றனர். 298 பேர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். 5,154 பேர் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.
ராணிப்பேட்டை மாவட்டம்:
ராணிப்பேட்டை மாவட்டத்தில் 2,648 உள்ளாட்சி அமைப்பு பதவிகள் உள்ளன. இந்த பதவிகளுக்கு 7,651 பேர் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர். அதில், 91 பேரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. 989 பேர் மனுக்களை வாபஸ் பெற்றனர்.
486 பேர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, இறுதியாக 6,085 பேர் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.
13 மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு 95 பேர் மனுதாக்கல் செய்திருந்தனர். 10 பேரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. 17 பேர் வேட்புமனுவை திரும்ப பெற்றனர். களத்தில் 68 பேர் தேர்தலில் போட்டியிட உள்ளனர்.
127 ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு 684 பேர் மனுதாக்கல் செய்திருந்தனர். 11 பேரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. 165 பேர் மனுக்களை வாபஸ் பெற்றனர். 508 பேர் தேர்தல் களத்தில் உள்ளனர்.
288 ஊராட்சிமன்ற தலைவர் பதவிக்கு 1,247 பேர் மனுதாக்கல் செய்திருந்தனர். அதில் 27 பேரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. 319 பேர் தங்களது வேட்புமனுவை வாபஸ் பெற்றனர். 22 பேர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள 879 பேர் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.
ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர் 2,220 பதவிக்கு 5,625 பேர் மனுதாக்கல் செய்திருந்தனர். அதில் 43 பேரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. 488 பேர் வேட்பு மனுவை வாபஸ் பெற்றனர். 464 பேர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். 4,630 பேர் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டம்:
திருப்பத்தூர் மாவட்டத்தில் 2,125 உள்ளாட்சி அமைப்பு பதவிகள் உள்ளன. இந்த பதவிகளுக்கு 7,838 பேர் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர். அதில், 113 பேரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. 1,261 பேர் மனுக்களை வாபஸ் பெற்றனர்.
179 பேர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, இறுதியாக 6,285 பேர் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.
13 மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு 104 பேர் மனுதாக்கல் செய்திருந்தனர். 8 பேரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. 22 பேர் வேட்புமனுவை திரும்ப பெற்றனர். களத்தில் 74 பேர் தேர்தலில் போட்டியிட உள்ளனர்.
125 ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு 679 பேர் மனுதாக்கல் செய்திருந்தனர். 5 பேரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. 193 பேர் மனுக்களை வாபஸ் பெற்றனர். 481 பேர் தேர்தல் களத்தில் உள்ளனர்.
208 ஊராட்சிமன்ற தலைவர் பதவிக்கு 1,118 பேர் மனுதாக்கல் செய்திருந்தனர். அதில் 17 பேரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. 336 பேர் வேட்புமனுவை வாபஸ் பெற்றனர். 3 பேர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். 782 பேர் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.
ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர் 1,779 பதவிக்கு 5,937 பேர் மனுதாக்கல் செய்திருந்தனர். அதில் 83 பேரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. 710 பேர் வேட்பு மனுவை வாபஸ் பெற்றனர். 176 பேர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். 4,968 பேர் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.