Published : 26 Sep 2021 03:24 AM
Last Updated : 26 Sep 2021 03:24 AM

உள்ளாட்சி தேர்தல் விதிமீறல் புகார் அளிக்க தேர்தல் பார்வையாளர்களின் தொடர்பு எண்கள் வெளியீடு

சென்னை

தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் இதர மாவட்டங்களில் காலியாக உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் அக்.6 மற்றும் 9-ம் தேதிகளில் நடைபெற உள்ளது.

இந்நிலையில், இத்தேர்தல் விதிமீறல்கள் தொடர்பாக பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சிகள் தொடர்புகொள்ள ஏதுவாக தேர்தல் பார்வையாளர்களின் தொடர்பு எண்களை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டதேர்தல் பார்வையாளர் வே.அமுதவல்லி - 9363126471, வா.சம்பத் (செங்கல்பட்டு) - 9003912208, கே.எஸ்.பழனிசாமி (விழுப்புரம்) - 7550372424, கே.விவேகானந்தன் (கள்ளக்குறிச்சி) - 9487919207, சா.விஜயராஜ்குமார் (வேலூர்) - 9487931295, வே.சாந்தா (ராணிப்பேட்டை) - 9363105413, சி.காமராஜ்(திருப்பத்தூர்) - 9363122443, ஜெ.ஜெயகாந்தன் (திருநெல்வேலி) - 9363120382, பொ.சங்கர் (தென்காசி) - 7200587897 ஆகிய எண்களில் தொடர்புகொள்ளலாம்.

மேலும், இதர மாவட்டங்களான கோவை, நீலகிரி மாவட்டங்களின் தேர்தல் பார்வையாளர் மா.மதிவாணன் - 9445477810, அ.ஞானசேகரன் (திருவள்ளூர், திருவண்ணாமலை) - 9445001100, த.ந.ஹரிஹரன் (சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி) - 9487935429, அனில் மேஷ்ராம் (பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர்) - 7402905800, சி.நா.மகேஸ்வரன் (தூத்துக்குடி, கன்னியாகுமரி, ராமநாதபுரம்) - 9488242419 ஆகிய எண்களிலும்,

இரா.செல்வராஜ் (நாகப்பட்டினம், திருவாரூர்) - 9442431596, கா.பாஸ்கரன் (மதுரை, தேனி, திண்டுக்கல்) - 8870099651, மு.கருணாகரன் (சிவகங்கை, விருதுநகர்) - 9003628449, சு.சிவசண்முகராஜா (ஈரோடு, திருப்பூர், நாமக்கல்) - 9841276600, சு.கணேஷ் (திருச்சி,கரூர், புதுக்கோட்டை) - 8489936800,இரா.நந்தகோபால் (கடலூர், மயிலாடுதுறை) - 9962179999 ஆகியஎண்களிலும் தொடர்புகொள்ள லாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x