நெல் கொள்முதல் நிலையங்களில் காத்திருக்க தேவையின்றி இணையவழி முன்பதிவு செய்யும் வசதி: தமிழக அரசு அறிமுகம்

நெல் கொள்முதல் நிலையங்களில் காத்திருக்க தேவையின்றி இணையவழி முன்பதிவு செய்யும் வசதி: தமிழக அரசு அறிமுகம்
Updated on
1 min read

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக மேலாண் இயக்குநர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழகத்தில் நெல் பயிரிடும் விவசாயிகள் பயனடையும் வகையில் வழிகாட்டு நெறிமுறைகள் படி, மாவட்ட ஆட்சியரின் அனுமதியை பெற்று தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தால் அந்தந்த மாவட்டங்களில் மத்திய அரசின் பரவலாக்கப்பட்ட நெல் கொள்முதல் திட்டத்தின் கீழ் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு, நெல் கொள்முதல் பணிகள் நடைபெற்று வருகின்றன.

விசாயிகள் நெல் கொள்முதல் நிலையங்களில் எளிதில் பதிவு செய்து கொண்டு நெல் விற்பனை செய்ய ஏதுவாக, ஏற்கெனவே பயன்பாட்டில் உள்ள இ-டிபிசி இணையதளத்தில் எதிர்வரும் கொள்முதல் பருவம் 2021-22ல்விவசாயிகள் தங்கள் பெயர், ஆதார் எண், புல எண், வங்கிக்கணக்கு எண் உள்ளிட்ட விவரங்களை எளிய முறையில் www.tncsc.tn.gov.in மற்றும் www.tncsc-edpc.in ஆகிய இணையதளத்தில் பதிவேற்றம் செய்து கொள்முதல் செய்யவேண்டிய தேதியை முன்பதிவு செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.

மேலும், மேற்கண்ட இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டவுடன் விவசாயிகள் நிலம் இருக்கும் கிராமங்களின் அடிப்படையில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு, இணைய வழியின் மூலமாகவே கிராம நிர்வாக அலுவலரின் ஒப்புதல் பெறப்பட்டு, ஒதுக்கீடு செய்யப்பட்ட நேரடி நெல் கொள்முதல் நிலயத்தின் பெயர், நெல்விற்கப்படும் நாள் மற்றும் நேரம் ஆகிய விவரங்கள் விவசாயிகளின் கைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலம் அனுப்பப்படும்.

விவசாயிகள் அந்த குறுஞ்செய்தி அடிப்படையில், குறித்த காலத்தில்நேரடி நெல்கொள்முதல் நிலையத்தில் தாங்கள் விளைவித்த நெல்லை விற்பனை செய்துபயன்பெறலாம். கூடுதல் விவரங்களுக்கு சம்பந்தப்பட்ட முதுநிலை மண்டல மேலாளர், அல்லது மண்டல மேலாளர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in