பேரறிவாளனுக்கு 4-வது முறை பரோல் நீட்டிப்பு

பேரறிவாளன்: கோப்புப்படம்
பேரறிவாளன்: கோப்புப்படம்
Updated on
1 min read

மருத்துவ சிகிச்சைக்காக பேரறிவாளனுக்கு 4-வது முறையாக பரோல் நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றுள்ள பேரறிவாளன், சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக அவரை பரோலில் விடுவிக்க வேண்டும் என்று, பேரறிவாளனின் தாயார் அற்புதம் அம்மாள் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தார். இதனை ஏற்று, கடந்த மே மாதம் பேரறிவாளனுக்கு 30 நாள் பரோலில் விடுவிக்கப்பட்டார்.

இதையடுத்து, ஜோலார்பேட்டையில் உள்ள வீட்டில் தங்கியுள்ள பேரறிவாளன் சிகிச்சை பெற்று வருகிறார். தொடர் மருத்துவ சிகிச்சையின் காரணமாக, அவருக்கு கடந்த ஜூன், ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் மூன்று முறை பரோல் நீட்டிப்பு அளிக்கப்பட்டது.

இந்நிலையில், பேரறிவாளனின் உடல் நிலை மற்றும் தொடர் மருத்துவ சிகிச்சையை கருத்தில் கொண்டு, அவருக்கு 4-வது முறையாக 30 நாட்களுக்கு பரோல் நீட்டிப்பு வழங்கி இன்று (செப். 25) உத்தரவிடப்பட்டுள்ளது. விழுப்புரம் மரகதம் மருத்துவமனையில் சிறுநீரக தொற்று பிரச்சினைக்காக பேரறிவாளன் சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in