

கரோனா தொற்று சூழல் காரணமாக வீடுகளிலேயே இருப்பவர்கள் இணைய வழியில் பங்கேற்று பயன்பெறும் வகையில் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ், ‘நலமாய் வாழ’ எனும் ஆன்லைன் சுகாதார விழிப்புணர்வு நிகழ்ச்சியை வழங்குகிறது.
வரும் 29-ம் தேதி உலக இதய தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி, ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ், வெங்கடேஸ்வரா மருத்துவமனைகள் உடன் இணைந்து, ‘இளம் வயதில் ரத்தஉயர் அழுத்தம் மற்றும் மாரடைப்பு’ எனும் தலைப்பிலான ஆன்லைன் சுகாதார விழிப்புணர்வு நிகழ்ச்சியை நாளை (செப்.26, ஞாயிற்றுக்கிழமை) மாலை 4 மணிக்கு நடத்த உள்ளன.
இத்துறையில் பல ஆண்டு அனுபவமிக்க வெங்கடேஸ்வரா மருத்துவமனைகளின் நிறுவனரும், நிர்வாக இயக்குநருமான இதய நோய் நிபுணர் டாக்டர்சு.தில்லை வள்ளல், பொதுமருத்துவ எம்.டி மற்றும் இதயவியல் நிபுணர் டாக்டர் டி.சுபாஷ் சந்தர் ஆகியோர் பங்கேற்று, உயர் ரத்த அழுத்தம், மாரடைப்பு குறித்த மருத்துவ ஆலோசனைகளை வழங்க உள்ளனர்.
கட்டணம் கிடையாது
இந்த நிகழ்வில் பங்கேற்க கட்டணம் எதுவும் கிடையாது. பங்கேற்க விரும்புவோர் https://www.htamil.org/00066 என்ற லிங்க்கில் பதிவு செய்துகொள்ளலாம். தங்கள் சந்தேகங்களை contesttamil@hindutamil.co.in என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி, அதற்கான விளக்கங்களையும் நிகழ்வில் பெறலாம்.