Published : 25 Sep 2021 03:33 AM
Last Updated : 25 Sep 2021 03:33 AM

டிஎன்பிஎல் புதிய வலைதளம் தொடக்கம்: நிலைப்புத் திறன் அறிக்கை நூல் வெளியீடு

தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனம் (TNPL) தனது 41-வது ஆண்டு பொதுக்குழு கூட்டத்தை மெய்நிகர் முறையில் நடத்தியது. அப்போது புதிதாக உருவாக்கப்பட்ட டிஎன்பிஎல் வலைதளம் (https://www.tnpl.com/) தொடங்கிவைக்கப்பட்டது; நிலைப்புத்திறன் அறிக்கை நூலும் வெளியிடப்பட்டது.

செல்போன் பயன்பாடு அதிகரித்துள்ள நிலையில், டிஎன்பிஎல் புதிய வலைதளம் செல்போன், டேப்லெட், கணினி ஆகியவற்றின் வாயிலாக பயன்படுத்துவதற்கு ஏற்றவாறு உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் புதியவடிவமைப்பு தத்துவத்தின் அடிப்படையில் அதிகமான காட்சி சார்ந்தவலைதள தகவல்களை கொண்டுள்ளது.

இன்று, உலக பெரு நிறுவனங்களுக்கு இடையில் நிலைப்புத் திறன் அறிக்கை என்பது தொழில் மற்றும் வணிக வளர்ச்சிக்கான மிக முக்கியமான தேவையாகிவிட்டது. டிஎன்பிஎல் தொடக்கத்திலிருந்தே ‘கழிவிலிருந்து கொழிக்கும் செல்வம்' என்ற கோட்பாட்டில் இயங்குகின்ற நிறுவனமாகும். கரும்பின் கழிவான சக்கைதான் டிஎன்பிஎல் தயாரிக்கும் காகிதத்தின் முதன்மையான மூலப்பொருள். கைவிடப்பட்ட சுமார் 1,87,680 ஏக்கர் தரிசு நிலங்களை மரக்கூழ் செய்வதற்கான பசுமை நிலங்களாக டிஎன்பிஎல் மாற்றி இருக்கிறது. இந்தியாவிலேயே தன் உற்பத்தி கழிவிலிருந்து உயர் தரமான சிமென்ட் செய்யும் ஒரே காகித நிறுவனம் டிஎன்பிஎல் ஆகும்.

நேர்மறையான எதிர்காலத்தை எதிர்கொள்ள இந்திய காகித உற்பத்தி தொழில் கூடங்களில் முதன்முறையாக உலக அளவில் பின்பற்றுகிற நிலைப்புத்திறன் அறிக்கையை டிஎன்பிஎல் வெளிக்கொணர்ந்துள்ளது.

டிஎன்பிஎல் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் ராஜீவ் ரஞ்சன், நிதித் துறை செயலர் கிருஷ்ணன், கூடுதல் அரசு முதன்மைச் செயலர் ஆகியோரின் முன்னிலையில் ‘Circular Economy – The Roots Of Our Business’ (சுழல் வட்ட பொருளாதாரம் எங்கள் வணிகத்தின் வேர்கள்) என்ற நூல் வெளியிடப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x