

சரத்குமார் உள்ளிட்ட நடிகர் சங்க முன்னாள் நிர்வாகிகள் மீது புகார் அளிக்கப்பட்டது ஒட்டுமொத்த நிர்வாகிகளின் முடிவுதான் என்று நடிகர் சங்கத் தலைவர் நாசர் கூறியுள்ளார்.
இதுகுறித்து நாசர் வெளியிட் டுள்ள அறிக்கை: தென்னிந்திய நடிகர் சங்க அறக்கட்டளையின் சார்பில் அதன் முன்னாள் நிர்வாகிகளான சரத்குமார், ராதாரவி, வாகை சந்திரசேகர் ஆகியோர் மீது போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுக்கப்பட்டது. இது தொடர் பாக சரத்குமார் அளித்துள்ள பதில் மனுவில், இது தனிப்பட்ட முறை யில் தன்னை பழிவாங்கும் நட வடிக்கை என்று குறிப்பிட்டுள்ளார்.
நடிகர் சங்க செயல்பாட்டில் நடிகர் சங்க சட்டத்துக்கு உட்பட் டது மற்றும் அறக்கட்டளை சட்டத் துக்கு உட்பட்டது ஆகிய இரண்டு விதமான சட்ட திட்டங்கள் உள்ளன. அறக்கட்டளைக்கு வருமானம் இருக்கிறதோ இல்லையோ, அது சார்ந்த கணக்குகளை சட்டப்படி வருடா வருடம் தணிக்கை செய்து பராமரிப்பது நிர்வாகத்தின் கடமை. ஆனால், 10 ஆண்டுகளாக பொறுப் பில் இருந்த முன்னாள் நிர்வாகிகள் கடந்த இரண்டரை ஆண்டுகால கணக்குகளை உடனடியாக ஒப்ப டைத்திருக்க வேண்டாமா?
புதிய நிர்வாகம் பல கடிதங் கள் எழுதிய பின்னரே கணக்கு ஒப்படைக்கப்பட்டது. தணிக்கை செய்து பார்த்தபோது, லட்சக் கணக்கான ரூபாய் தவறாக கையாளப்பட்டது தெரிய வந்தது. தணிக்கையாளர் இதை சட்டப் படி அணுக வேண்டும் என்று பரிந்துரை செய்ததால், காவல் துறையில் புகார் செய்வது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
எங்களது அறக்கட்டளை நிர்வாகி பூச்சி முருகன் காவல்துறையில் புகார் அளித்தார். இது ஒட்டு மொத்த நிர்வாகிகளின் முடிவு. தனிப்பட்ட முடிவு அல்ல. இது பழிவாங்கும் நடவடிக்கை என்ற குற்றச்சாட்டை வன்மையாக மறுக்கிறோம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.