

தமிழகத்தில் 2 லட்சத்து 22 ஆயி ரத்து 592 சிறு வணிகர்களுக்கு ரூ.5 ஆயிரம் வீதம் ரூ.111 கோடியே 21 லட்சம் கடன் வழங்கப்பட்டுள்ள தாக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தெரிவித்தார்.
தமிழக கூட்டுறவுத் துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம், அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில் நடந்தது.
இக்கூட்டத்தில் அமைச்சர் கூறிய தாவது:
தமிழகத்தில் விவசாய உற்பத் தியை அதிகரிக்கவும், விவசாயி களின் வருவாயை பெருக்கவும், 2011-ல் இருந்து இதுவரை 49 லட்சத்து 85 ஆயிரத்து 193 விவசாயிகளுக்கு ரூ. 22 ஆயிரத்து 586 கோடியே 58 லட்சம் பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது.
மேலும், நடப்பாண்டுக்கு ரூ.5 ஆயிரத்து 500 கோடி பயிர்க்கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதுவரை 9 லட்சத்து 64 ஆயிரத்து 976 விவசாயிகளுக்கு ரூ.5 ஆயிரத்து 240 கோடியே 65 லட்சம் வழங்கப் பட்டுள்ளது. இதுவரை பயிர்க்கடன் பெற்ற விவசாயிகளில் 92 சதவீதம் பேர் கடனை சரியாக செலுத்தி, வட்டிச் சலுகையாக ரூ.755 கோடியே 23 லட்சம் பெற்றுள்ளனர்.
பயிர்க்கடனை திரும்ப செலுத்த இயலாமல் தவணை தவறிய விவசாயிகளுக்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் மீது ஜப்தி அல்லது ஏல நடவடிக்கைகள் எடுக்கப்பட வில்லை.
அரசு சேமிப்பு கிடங்குகளில் பொருட்களை வைத்துள்ளவர் களுக்கு, ஈட்டுக் கடனாக ரூ. ஆயி ரத்து 206 கோடி வழங்கப்பட்டுள் ளது. மழை வெள்ளத்தால் பாதிக்கப் பட்ட சிறு வணிகர்களுக்கு வட்டி யில்லா கடனாக ரூ.5 ஆயிரம் கூட்டுறவு வங்கிகள் மூலம் வழங்கப்படுகிறது. இதுவரை இத்திட்டத்தில், 2 லட்சத்து 22 ஆயி ரத்து 592 சிறு வணிகர்களுக்கு ரூ.111 கோடியே 21 லட்சம் வழங் கப்பட்டுள்ளது. 72 பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் வாயிலாக இதுவரை 13 ஆயிரத்து 971 டன் காய்கறிகள் ரூ.41 கோடியே 47 லட்சத்துக்கு விற்கப்பட்டுள்ளது. மேலும் காய்கறி பயிரிடும் 51 ஆயிரத்து 374 விவசாயிகளுக்கு ரூ.285 கோடியே 91 லட்சம் சாகுபடி கடன் வழங்கப்பட்டுள்ளது. 15 சத வீதம் வரை தள்ளுபடி விலையில், 106 அம்மா மருந்தகங்கள் மற்றும் 193 கூட்டுறவு மருந்தகங்கள் மூலம், ரூ.304 கோடியே 31 லட்சத்துக்கு மருந்துகள் விற்கப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில், கூட்டுறவுத்துறை செயலர் சிவ்தாஸ் மீனா, கூட்டுற வுச் சங்கங்களின் பதிவாளர் ஜெய முரளிதரன் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.