தமிழகம் முழுவதும் பழைய குற்றவாளிகளின் வீடுகளில் காவல் துறையினர் சோதனை: 450 நபர்கள் கைது

சைலேந்திர பாபு: கோப்புப்படம்
சைலேந்திர பாபு: கோப்புப்படம்
Updated on
1 min read

தமிழகம் முழுவதும் நேற்றிரவு பழைய குற்றவாளிகளின் வீடுகளில் காவல் துறையினர் சோதனை மேற்கொண்டனர்.

இது தொடர்பாக, காவல் துறைத் தலைமை இயக்குநர் அலுவலகம் இன்று (செப். 24) வெளியிட்ட செய்திக்குறிப்பு:

"தமிழ்நாடு காவல் துறை தலைமை இயக்குநர் சைலேந்திர பாபு உத்தரவின் பேரில், தமிழகம் முழுவதும் நேற்று (செப். 23) இரவு முதல் முற்றுகைச் செயல்பாடு (Stroming Operation) ஒரே நேரத்தில் மேற்கொள்ளப்பட்டது. இந்த நடவடிக்கையின் மூலம் 870 பழைய குற்றவாளிகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

சோதனைக்கு உட்படுத்தப்பட்டவர்களில் மொத்தம் 450 நபர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்களில் 181 நபர்கள் நிலுவையில் உள்ள நீதிமன்ற வழக்குகளின் பிடியானையின் படி கைதானார்கள்.

கைது செய்யப்பட்ட குற்றவாளிகளிடமிருந்து 3 நாட்டுத் துப்பாக்கிகள் மற்றும் 250 கத்திகள் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும், 420 நபர்களிடமிருந்து நன்னடத்தைக்காக பினை ஆணை பெறப்பட்டுள்ளது. கொலை குற்றங்களில் ஈடுபடுகின்ற ரவுடிகளுக்கு எதிரான காவல் துறையின் இந்த கடுமையான நடவடிக்கைகள் தொடரும்".

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in