Published : 24 Sep 2021 03:21 AM
Last Updated : 24 Sep 2021 03:21 AM

காஞ்சிபுரம் உள்ளிட்ட 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல்; ஒரு லட்சம் வேட்புமனுக்கள் தாக்கல்: இறுதி வேட்பாளர் பட்டியல் நாளை வெளியாகிறது

சென்னை

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் 28 மாவட்டங்களில் காலியாக உள்ள உள்ளாட்சி பதவிகளுக்கான தேர்தலில் 1 லட்சத்து 387 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. நாளை மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு, வேட்பா ளர்களுக்கான சின்னங்களும் ஒதுக்கப்பட உள்ளன.

தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திரு நெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு அக். 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் 2 கட்டமாக தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த 9 மாவட்டங்களில் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள், கிராம ஊராட்சித் தலைவர்கள், கிராம ஊராட்சி வார்டு உறுப் பினர்கள் என மொத்தம் 27 ஆயிரத்து 3 பதவிகளுக்கு தேர்தல் நடக்கிறது.

அத்துடன், இதர 28 மாவட் டங்களில் கடந்த ஜூன் மாத நிலவரப்படி காலியாக உள்ள 789 ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கும் அக்.9-ல் தேர்தல் நடத்தப் படுகிறது.

இந்த தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 15-ம் தேதி தொடங்கி, 22-ம் தேதி நிறை வடைந்தது. 9 மாவட்டங்களில் கிராம ஊராட்சி வார்டு உறுப் பினர் பதவிக்கு 72,071 வேட்புமனுக் களும் கிராம ஊராட்சித் தலைவர் பதவிக்கு 15,967 வேட்புமனுக்களும் தாக்கல் செய்யப்பட்டன. ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கு 8,671, மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 1,122 என மொத்தம் 97,831 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இதர 28 மாவட்டங்களில் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 1,466, கிராம ஊராட்சித் தலைவர் பதவிக்கு 519, ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினருக்கு 376, மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினருக்கு 186 என மொத்தம் 2,547 வேட்புமனுக் கள் தாக்கல் செய்யப்பட்டன. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள ஊரக உள்ளாட்சி அமைப்பு களுக்கான தேர்தலில் ஒட்டு மொத்தமாக 1 லட்சத்து 378 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

மனுக்கள் மீதான பரிசீலனை நேற்று நடந்தது. அந்தந்த தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் வேட்புமனுக்களை பரிசீலனை செய்தனர். அவற்றில் குறைபாடுகள் உள்ள மனுக்களை நிராகரித்தனர். வேட்புமனுக்களை திரும்பப் பெற நாளை (25-ம் தேதி) கடைசி நாளாகும். நாளை மாலை வேட்பாளர்களின் இறுதிப் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. அத்துடன் வேட்பாளர்களுக்கான சின்னங்களும் ஒதுக்கப்பட உள்ளன.

வேட்பாளர்கள் 26-ம் தேதி முதல் தீவிர பிரச்சாரத்தை தொடங்க உள்ளனர். கரோனா கட்டுப்பாடுகளை பின்பற்றி பிரச் சாரம் மேற்கொள்ளுமாறு வேட் பாளர்களுக்கு மாவட்ட தேர்தல் அலுவலர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.

இந்தத் தேர்தலுக்காக 171 தேர்தல் நடத்தும் அலுவலர்கள், 3,777 உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமிக்கப்பட் டுள்ளனர். வாக்குப்பதிவு பணியில் 1 லட்சத்து 10 ஆயிரம் அலுவலர் கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இவர்களுக்கான பயிற்சி இன்று (செப்.24) தொடங்குகிறது. தேர் தல் பணியில் ஈடுபடுவோர் அனை வரும் 2 டோஸ் கரோனா தடுப்பூசி கட்டாயம் செலுத்தி இருக்க வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது.

மனு தாக்கல் முடிந்த நிலையில், தேர்தல் பார்வையாளர்களாக நிய மிக்கப்பட்ட 20 ஐஏஎஸ் அதிகாரி கள், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மாவட்டங்களுக்குச் சென்று கண்காணிப்பு மற்றும் ஆய்வுப் பணிகளைத் தொடங்கியுள்ளனர். அவர்களுக்கான உரிய ஏற்பாடு களை செய்து தருமாறு மாவட்ட ஆட்சியர் களுக்கு மாநில தேர்தல் ஆணையர் வெ.பழனிகுமார் உத்தரவிட்டுள்ளார்.

பதற்றமான வாக்குச்சாவடி

இதனிடையே, மாவட்ட ஆட்சி யர்கள், காவல்துறை அலுவலர் களுடன் கலந்தாலோசித்து பதற்ற மான மற்றும் பிரச்சினைக்குரிய வாக்குச்சாவடிகளை கண்டறிய வேண்டும். அந்த இடங்களில் அதிகபட்ச பாதுகாப்பு வழங்கு வதோடு, வாக்குப்பதிவு நட வடிக்கைகளை வீடியோவில் பதிவு செய்ய வேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி யுள்ளது.

வாக்கு எண்ணிக்கை அக் டோபர் 12-ம் தேதி நடக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x