

மகாத்மா காந்தியடிகள் கற்றுத்தந்த தொண்டுள்ளம், சகிப்புத்தன்மை நமது பாதையாகட்டும் என்று, அரை ஆடை புரட்சியின் நூற்றாண்டு நாளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
காந்தியடிகள், 1921-ம் ஆண்டு செப்.22-ம் தேதி, மதுரைக்கு வந்தபோது, அங்குள்ள மக்களின்ஏழ்மை நிலையைக் கண்டு,தனது மேலாடையைத் துறந்தார். அந்த அரை ஆடை புரட்சி நாளின்நூற்றாண்டு தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது.
இதையொட்டி முதல்வர் ஸ்டாலின் சமூக வலைதளங்களில் நேற்று வெளியிட்ட செய்தியில்,
‘‘மதுரை மேலமாசி வீதியும், 1921-ம் ஆண்டு செப்.22-ம் தேதியும் இந்திய வரலாற்றின் திசையை மாற்றி எழுதியதன் நூற்றாண்டு. இந்திய மக்களின் துன்பங்களை உணர்ந்த அண்ணல் காந்தியடிகள் தன் மேலாடையை துறந்த அரை ஆடை புரட்சி நாள் இன்று. மகாத்மா கற்றுத் தந்த தொண்டுள்ளமும் சகிப்புத் தன்மையும் நமது பாதையாகட் டும்’’ என்று கூறியுள்ளார்.