

புதுக்கோட்டை மாவட்டம் குன்றாண்டார்கோவில் அருகே கூகூரில் தமாகா தலைவர் ஜி.கே.வாசன் நேற்று செய்தியாளர்களிடம் கூறியது:
உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் 9 மாவட்டங்களில் அதிமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்தி எங்களுக்கு சாதகமான இடங்களை பெற்று வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எங்களைப் பொறுத்தவரை போட்டியிடும் இடங்களின் எண்ணிக்கையைவிட வெல்வதற்கு சாதகமான இடங்களுக்கே முக்கியத்துவம் அளிக்கிறோம்.
தமிழக அரசு பழிவாங்கும் அரசாக இல்லாமல், மக்களுக்கு ஆக்கப்பூர்வமான வளர்ச்சி பணிகளை செய்யும் அரசாக இருக்க வேண்டும்.
இவ்வாறு ஜி.கே.வாசன் கூறினார்.