

மாவட்ட நீதிமன்றங்களில் 5 ஆண்டு களுக்கு மேல் நிலுவையில் உள்ள வழக்கு களின் தேக்கத்தைக் குறைக்க உயர் நீதிமன்ற பதிவாளர் உத்தர விட்டுள்ளார்.
இதுதொடர்பாக உயர்நீதிமன்ற தலைமைப் பதிவாளர் பொன்.கலை யரசன் கீழமை நீதிமன்ற நீதிபதிக ளுக்கு விடுத்துள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:
மாவட்ட நீதிமன்றங்களில் 5 ஆண்டு களுக்கு மேல் நிலுவையில் உள்ள குற்ற வழக்குகளை ஒவ்வொரு திங்கள் கிழமையும் விசாரணைக்கு பட்டியலிட வேண்டும். அதேபோன்று 5 ஆண்டு களுக்கு மேல் நிலுவையில் உள்ள சிவில் வழக்குகளை ஒவ்வொரு புதன் கிழமையும் விசாரணைக்கு பட்டிய லிடவேண்டும். நிலுவையில் உள்ள பழைய குற்ற வழக்குகள், முதல் தகவல் அறிக்கை நிலையிலேயே நிலுவையில் உள்ள வழக்குகள், பிணையில் வெளிவர முடியாத, பிடி யாணை நிறைவேற்ற முடியாத வழக்கு களை முடிப்பதற்கு தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வழக்குகளின் தேக்கத்தைக் குறைக்கும் வகையில் அவ்வப்போது போலீஸ் அதிகாரிகளுடன் கூட்டங் கள் நடத்தி இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த உத்தரவு களை மாவட்ட நீதிபதிகள் உடனடி யாக அமல்படுத்த வேண்டும்.
மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதிகள், தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதிகள் இது தொடர்பாக எத்தனை வழக்குகள் பட்டியலிடப்பட்டுள்ளன. எத்தனை வழக்குகள் முடித்து வைக்கப் பட்டுள்ளன என்ற புள்ளிவிபரத்தோடு வாராந்திர பட்டியலை உயர் நீதி மன்றத்துக்கு அனுப்ப வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.