

சென்னை வடபழனியில் உள்ள சிம்ஸ் மருத்துவமனையில் சிக்க லான, அதி நவீன பெருந் தமனி ரத்த நாள அழற்சி அறுவை சிகிச்சை நாட்டிலேயே முதல்முறை யாக வெற்றிகரமாக செய்யப்பட்டு உள்ளது.
இதுகுறித்து மருத்துவ நிபுணர் கள் வி.வி.பக்ஷி, ஏ.பி.கோபால முருகன், அஜு ஜேக்கப் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த 47 வயதான நபருக்கு 4 ஆண்டுகளுக்கு முன்பு பெருந்தமனியில் வெடிப்பு மற்றும் அடைப்பு ஏற்பட்டு உடல் நலம் பாதித்தது. இதனால் அங் குள்ள மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்தனர். பின்னர் அதே தமனியில் மீண்டும் பிரச்சினை உருவானது. மறுபடியும் அறுவை சிகிச்சை செய்ய அங்குள்ள மருத்துவ்ர்கள் தயங்கினர். இதனால் சிம்ஸ் மருத்துவமனைக்கு அந்த நோயாளி சிகிச்சைக்காக வந்தார்.
அவரை தீவிரமாக பரிசோதித்து ஆயத்த ஒட்டுமுறைப் பதியம் முறையில் செயற்கை பெருந்தமனி பொருத்த முடிவு செய்யப்பட்டது. இதுபோன்ற சிகிச்சையை இந்தியா வில் இதற்கு முன் யாரும் செய்த தில்லை. இதனால் ஒருவாரம் தீவிர ஆலோசனை மற்றும் திட்டமிடலுக் குப் பிறகு இந்த அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்து முடிக்கப் பட்டது.
நோயாளியின் உடல் வெப்ப நிலை 15 டிகிரி செல்சியஸுக்கு கொண்டுவரப்பட்டு செயற்கை இதயம், நுரையீரல் கருவிகள் இணைக்கப்பட்டன. ரத்த ஓட்டம் 1 மணி நேரம் நிறுத்தப்பட்டது. 8 மணி நேரம் நீடித்த அறுவை சிகிச்சை முடிந்த பின்னர் நோயாளியின் உடல் வெப்பநிலை 37 டிகிரி செல் சியஸுக்கு அதிகரிக்கப்பட்டது.
அறுவை சிகிச்சைக்குப் பிறகு எந்த பிரச்சனையும் ஏற்படாததால் 2 நாட்களில் நோயாளி வீடு திரும்பினார். இப்போது சிகிச்சை முடிந்து 2 வாரமாகிவிட்டது. அவர் நலமாக உள்ளார். இயல்பாக செய்ய வேண்டிய அனைத்து பணிகளையும் தொடர்கிறார்.