

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 22 மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் இடங்களில் 2 இடங்கள் காலியாக உள் ளன. அவற்றில் ஒரு இடத்துக்கு (வார்டு எண் 9) தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்பதவிக்கு ஏற்கெனவே திமுக சார்பில் பழனிசாமி வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். இந்நிலையில், முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் எம்எல்ஏ தலைமையில், அதிமுக வேட்பாளர் பா.அழகுசுந்தரி, அன்னவாசல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
தொடர்ந்து, அதிமுக கூட்டணி கட்சியான பாஜக சார்பில் சாந்தர் வேட்புமனு தாக்கல் செய்தார். அப்போது, கட்சியின் தலைமை உத்தரவுப்படியே போட்டியிடுவதாக, வேட்புமனு தாக்கலுக்கு வந்திருந்த பாஜக மாவட்ட பொதுச்செயலாளர் சிவகாமி தெரிவித்தார்.
அதிமுகவை எதிர்த்து கூட்டணி கட்சியான பாஜக போட்டியிடுவது அரசியல் வட்டாரத்தில் விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது.