

ஜேஎன்யூ மாணவர் சங்கத் தலைவர் கண்ணய்யா குமாரை விடுதலை செய்ய வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட மகஇக (மக்கள் கலை இலக்கிய கழக) பாடகர் கோவன் கைது செய்யப்பட்டார்.
கடந்த செவ்வாய்க்கிழமை, சென்னை நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவன் முன்னால் கோவன் தலைமையில் போராட்டக்காரர்கள் திரண்டனர்.
ஜேஎன்யூ மாணவர் சங்கத் தலைவர் கண்ணய்யா குமாரை விடுதலை செய்ய வலியுறுத்தியும், அனைத்து கல்வி நிலையங்களிலிருந்தும் ஏபிவிபி அமைப்பை நீக்க வேண்டும் என்று கோரியும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அடுத்த 15-வது நிமிடத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட கோவன் உட்பட 57 பேர் கைது செய்யப்பட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட கோவன் மத்திய அரசைக் கண்டித்து பாடல் ஒன்றை பாடினார்.
ஏற்கெனவே மதுவிலக்கை வலியுறுத்தி மூடு டாஸ்மாக்கை மூடு என்ற பாடலைப் பாடியதற்காக கோவன் மீது தேசத் துரோக வழக்கு பாய்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.