டெங்கு தடுப்பு பணிகளை தீவிரப்படுத்த வேண்டும்: உள்ளாட்சி அமைப்புகளுக்கு அறிவுறுத்தல்

டெங்கு தடுப்பு பணிகளை தீவிரப்படுத்த வேண்டும்: உள்ளாட்சி அமைப்புகளுக்கு அறிவுறுத்தல்
Updated on
1 min read

டெங்கு காய்ச்சல் தடுப்புப் பணிகளை தீவிரப்படுத்துமாறு உள்ளாட்சி அமைப்புகளுக்கு சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.

கரோனா 3-வது அலை அக்டோபர் மாதத்தில் தொடங்க வாய்ப்பு இருப்பதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இதனிடையே, டெங்கு காய்ச்சல் பாதிப்பும் அதிகரித்து வருகிறது. இந்த ஆண்டில்இதுவரை 2,600 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் தினமும் 20 முதல்30 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதனால்,டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துமாறு உள்ளாட்சி அமைப்புகளுக்கு சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறும்போது, ‘‘தமிழகத்தில் இந்த ஆண்டில் இதுவரை 76 ஆயிரம் பேருக்கு டெங்கு காய்ச்சல் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில், 2,600என்ற அளவில்தான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. பாதிப்பு கண்டறியும் பகுதிகளில் தடுப்பு நடவடிக்கைளை தீவிரப்படுத்த அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின்கீழ் பணியாற்றும் 100நாள் பணியாளர்களை, கிராமப்புறங்களில் துாய்மைப் பணிகளில் ஈடுபடுத்திக் கொள்ள அறிவுறுத்தி இருக்கிறோம். தேவையற்ற பொருட்களை அப்புறப்படுத்தினால், அப்பகுதியில் மழைநீர் தேங்காது. இதன்மூலம், டெங்கு பரவுவது தடுக்கப்படும்’’ என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in