

திருவள்ளூர், கடலூர், வேலூர் உட்பட 7 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் நா.புவியரசன், நேற்று வெளியிட்ட அறிக்கையில்,
‘‘இன்று (செப்.22) திருவள்ளூர், வேலூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கனமழையும், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் மிதமான மழையும், உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் லேசான மழையும் பெய்யும். சென்னை நகரின் ஒருசில பகுதிகளில் மாலை மற்றும் இரவு நேரங்களில் இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்’’ என்று கூறப்பட்டுள்ளது.