பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம சுகாதார செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்

கரோனா தடுப்பூசி போடும் பணியில் முழு நேரமும் ஈடுபடுவதால் தாய்சேய் நலப் பணிகள் பாதிக்கப்படுவதாக கூறி கிராம சுகாதார செவிலியர்கள் சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.படம்: பு.க.பிரவீன்
கரோனா தடுப்பூசி போடும் பணியில் முழு நேரமும் ஈடுபடுவதால் தாய்சேய் நலப் பணிகள் பாதிக்கப்படுவதாக கூறி கிராம சுகாதார செவிலியர்கள் சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.படம்: பு.க.பிரவீன்
Updated on
1 min read

அரசு கிராம சுகாதார செவிலியர்களை தாய்சேய் நல பணிகளில் மட்டுமே ஈடுபடுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு கிராம சுகாதார செவிலியர்கள் சங்கம் சார்பில் சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது, சங்க நிர்வாகிகள் கூறியதாவது:

கரோனா தடுப்பூசி போடும் பணியில் நாங்கள் முழு நேரமாக ஈடுபடுவதால், தாய்சேய் நலப் பணிகள்பாதிக்கப்படுகின்றன. கர்ப்பிணி களுக்கு முறையாக சிகிச்சை அளிக்கமுடியவில்லை.

அதனால், அரசு கிராம சுகாதார செவிலியர்களை தாய்சேய் நல பணிகளில் மட்டுமே ஈடுபடுத்த வேண்டும். தாய்சேய் நலப் பணி, கிராம துணை சுகாதார நிலையங்களில் ஸ்டாஃப் நர்ஸ் செவிலியர்களை நியமிக்கும் முடிவை கைவிட வேண்டும். 8 மணி நேரப் பணி மட்டுமே வழங்க வேண்டும்.

ஊதிய உயர்வு போன்ற பொருளாதார ரீதியான கோரிக்கைகளை நாங்கள் முன்வைக்கவில்லை. எனவே, எங்கள் நியாயமான கோரிக்கைகளை அரசு விரைந்துநிறைவேற்றித் தரவேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in