

வேலூர் விஐடி பல்கலைக்கழகத் தில் ‘ரிவேரா-16’ என்கிற சர்வதேச கலை விழா நேற்று தொடங்கி 4 நாட்கள் நடைபெறுகிறது.
தொடக்க நிகழ்ச்சியில் தேசியக் கொடியை விஐடி வேந்தர் ஜி.விசுவ நாதன், விஐடி கொடியை கிரிக்கெட் வீரர் அஸ்வின், ஒலிம்பிக் கொடி மற்றும் ‘ரிவேரா-16’ கொடியை விஐடி துணைத் தலைவர்கள் சேகர் விசுவநாதன், ஜி.வி.செல்வம் ஆகியோர் ஏற்றி வைத்து வண்ண பலூன்களை பறக்க விட்டனர்.
விழாவில், விஐடி வேந்தர் ஜி.விசுவநாதன் பேசும்போது, ‘‘விஐடி பல்கலை.யில் நடைபெறும் ரிவேரா கலைவிழா நிகழ்ச்சிகள் ஒவ்வொரு ஆண்டும் கடந்த ஆண்டை மிஞ்சும் வகையில் உள் ளன’’ என்றார். ரிவேரா கிரிக்கெட் மற்றும் ஹாக்கிப் போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுக் கோப்பை மற்றும் மாரத்தான் ஓட்டத்தில் வெற்றி பெற்றவர் களுக்கு ரொக்கப் பரிசுகளை கிரிக் கெட் வீரர் அஸ்வின் வழங்கினார்.
முன்னதாக ரிவேரா-16 விழாவில் பெண் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில் ‘ஸ்டேண்ட் அப் இந்தியா’ என்ற தலைப்பில் விஐடி பல்கலைக்கழகத்தில் இருந்து 9.9 கி.மீ தொலைவுக்கு மாரத்தான் ஓட்டம் நடந்தது. 7,500 மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.