

கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஓ.) பணியில் 813 காலியிடங்களை நிரப்பும் பொருட்டு நாளை (ஞாயிற்றுக்கிழமை) எழுத்துத் தேர்வு நடக்கிறது. தமிழகம் முழுவதும் 813 மையங்களில் 10 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் தேர்வெழுதுகிறார்கள்.
சென்னையில் 257 மையங்களில் 75 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தேர்வெழுதுவதாக டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் தெரிவித்தனர். விஏஓ பணிக்கான குறைந்தபட்ச கல்வித்தகுதி 10-ம் வகுப்பு தேர்ச்சி என்ற போதிலும், பட்டதாரிகளும், முதுகலை பட்டதாரிகளும்தான் தேர்வுக்கு அதிகளவில் விண்ணப்பித்துள்ளனர். இத்தேர்வுக்கு நேர்காணல் கிடையாது. எனவே, எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றாலே விஏஓ பணி உறுதி என்பது குறிப்பிடத்தக்கது.