

சட்டபேரவைத் தேர்தலில் தேமுதிக சார்பில் போட்டியிட விண்ணப்பித்தவர்களிடம் நேற்று காணல் தொடங்கியது.
234 தொகுதிகளிலும் தேமுதிக சார்பில் போட்டியிட விரும்பு பவர்களிடம் இருந்து பிப்ரவரி 5 முதல் 14-ம் தேதி வரை விருப்ப மனுக்கள் பெறப்பட்டன. சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் நேற்று காலை 10 மணிக்கு நேர் காணல் தொடங்கியது. தேமுதிக தலைவர் விஜயகாந்த், இளைஞ ரணிச் செயலாளர் எல்.கே.சுதீஷ், தலைமை அலுவலகச் செயலாளர் பி.பார்த்தசாரதி, பொருளாளர் ஏ.ஆர். இளங்கோ உள்ளிட்டோர் நேர்காணல் நடத்தினர்.
முதல் நாளில் திருவள்ளூர், கன்னியாகுமரி, திருநெல்வேலி, நீலகிரி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 300 நபர்களிடம் நேர் காணல் நடத்தப்பட்டது.
உங்கள் தொகுதியில் தேமுதிகவின் செல்வாக்கு எந்த அளவுக்கு உள்ளது? உங்களுக்கு தனிப்பட்ட செல்வாக்கு உள்ளதா? உங்களால் எவ்வளவு செலவு செய்ய முடியும்? யாருடன் கூட்டணி வைக்கலாம்? வெற்றி பெற என்ன திட்டம் வைத்துள் ளீர்கள்? என்பது போன்ற பல கேள்விகளை விஜயகாந்த் கேட்டுள்ளார். மார்ச் 1-ம் தேதி வரை மாவட்ட வாரியாக நேர் காணல் நடைபெறவுள்ளது.