உள்ளாட்சித் தேர்தல்: ராணிப்பேட்டை மாவட்டத்தில் திமுக கூட்டணி போட்டியிடும் வார்டுகள் பட்டியல் வெளியீடு

அமைச்சர் ஆர்.காந்தி: கோப்புப்படம்
அமைச்சர் ஆர்.காந்தி: கோப்புப்படம்
Updated on
1 min read

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 7 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 127 ஒன்றிய வார்டில் 118 இடங்களில் திமுக, 6 இடங்களில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி 3 இடங்களில் போட்டியிட உள்ளன. இப்பட்டியலை திமுக மாவட்டச் செயலாளரும், அமைச்சருமான ஆர்.காந்தி வெளியிட்டுள்ளார்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 7 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 127 வார்டு கவுன்சிலர், 288 கிராம ஊராட்சித் தலைவர், 2,220 கிராம ஊராட்சி வார்டு கவுன்சிலர், 13 மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் என, மொத்தம் 2,648 பதவிகளுக்கு ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. இதில், மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் மற்றும் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு அரசியல் கட்சி சின்னங்களில் வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள்.

அதன்படி, ராணிப்பேட்டை மாவட்டத்தில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் இடங்கள் குறித்த பட்டியலை மாவட்டச் செயலாளரும் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சருமான ஆர்.காந்தி இன்று (செப். 21) வெளியிட்டார்.

இதில், 13 மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் பதவிகளில் 12 வார்டுகளில் திமுகவும், 3-வது வார்டில் காங்கிரஸ் கட்சியும் போட்டியிட உள்ளன. 7 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 127 ஒன்றிய வார்டில் 118 இடங்களில் திமுக, 6 இடங்களில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி 3 இடங்களில் போட்டியிட உள்ளன.

காங்கிரஸ் கட்சிக்கு காவேரிப்பாக்கம் ஒன்றியத்தில் 4-வது வார்டு, சோளிங்கர் ஒன்றியத்தில் 6, 13, 18-வது வார்டுகள், வாலாஜா ஒன்றியத்தில் 12-வது வார்டு, கணியம்பாடி ஒன்றியத்தில் கீழ் அரசம்பட்டு வார்டு காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. அதேபோல், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு அரக்கோணம் ஒன்றியத்தில் 6, 17 மற்றும் 23-வது வார்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in