Last Updated : 21 Sep, 2021 03:34 PM

 

Published : 21 Sep 2021 03:34 PM
Last Updated : 21 Sep 2021 03:34 PM

இந்தியத் திரைப்பட விழா புதுச்சேரியில் செப். 24-ல் தொடக்கம்

இந்தியத் திரைப்பட விழா புதுச்சேரியில் வரும் 24-ல் தொடங்குகிறது. வரும் 28-ம் தேதி வரை மாலையில் திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன. இப்படங்களை இலவசமாகப் பார்க்கலாம். சங்கரதாஸ் சுவாமிகள் விருது 'தேன்' திரைப்படத்துக்கு வழங்கப்படுகிறது.

புதுச்சேரி அரசு சார்பில் ஆண்டுதோறும் திரைப்பட விழா நடைபெறுவது வழக்கம். இத்திரைப்பட விழா இந்தியாவிலேயே புதுவையில் மட்டும்தான் 38 ஆண்டுகளாகத் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நடப்பாண்டுக்கான இந்தியத் திரைப்பட விழா-2021, வரும் செப்டம்பர் 24-ம் தேதி மாலை அலையன்ஸ் பிரான்சேஸ் கலை அரங்கில் நடைபெறுகிறது.

கடந்த 2020-ல் சிறந்த திரைப்படமாக 'தேன்' தேர்வு செய்யப்பட்டுள்ளது. சங்கரதாஸ் சுவாமிகள் பெயரிலான இந்த விருதினை இத்திரைப்படத்தின் இயக்குநர் கணேஷ் விநாயகனுக்கு முதல்வர் ரங்கசாமி வழங்குகிறார். விருதுக்கான பாராட்டுப் பத்திரத்துடன் ரூ.1 லட்சம் ரொக்கப் பரிசும் தரப்படும்.

அதையடுத்து அலையன்ஸ் பிரான்சேஸ் கலையரங்கில் 'தேன்' திரைப்படம் இலவசமாகத் திரையிடப்படும். அதைத் தொடர்ந்து வரும் 28-ம் தேதி வரை இதே அரங்கில் நாள்தோறும் மாலை 6 மணிக்கு இதர மொழித் திரைப்படங்களை இலவசமாகப் பார்க்கலாம்.

படங்கள் விவரம்:

வரும் 25ஆம் தேதி வங்காளத் திரைப்படம் 'ப்ரம்ம ஜனேன் கோபோன் கொம்மோட்டி', 26ஆம் தேதி மலையாளப் படம் 'சேப்', 27-ம் தேதி தெலுங்கு திரைப்படம் 'கதம்', 28-ம் தேதி இந்தி திரைப்படம் 'ஆவர்த்தன்' திரையிடப்படும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x