Published : 21 Sep 2021 03:19 AM
Last Updated : 21 Sep 2021 03:19 AM

நீட் தேர்வு தொடர்ந்தால் மருத்துவப் படிப்பில் கிராமப்புற ஏழை மாணவர்கள் சேர முடியாது: நீதிபதி ஏ.கே.ராஜன் குழு அறிக்கையில் புள்ளிவிவரத்துடன் தகவல்

சென்னை

தமிழகத்தில் நீட் தேர்வு தொடர்ந்தால், கிராமப்புற ஏழை மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேரமுடியாத சூழல் ஏற்படும் என்று நீதிபதி ஏ.கே.ராஜன் குழு அறிக்கையில் புள்ளிவிவரங்களுடன் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீட் தேர்வில் உள்ள பாதிப்புகளை ஆராய முன்னாள் நீதிபதிஏ.கே.ராஜன் தலைமையில் சுகாதாரத் துறை செயலர், மருத்துவக் கல்வி இயக்குநர் உள்ளிட்டோர் அடங்கிய குழுவை தமிழக அரசுஅமைத்தது. அந்த குழுவினர் நீட் தேர்வின் தாக்கம் குறித்துபுள்ளி விவரங்களின் அடிப்படையில் ஆராய்ந்தனர். நீட் தேர்வின்தாக்கம் குறித்து பொதுமக்களிடம் இருந்தும் கருத்துகளை பெற்றனர்.அந்த வகையில், சுமார் 85 ஆயிரம் பேர் கருத்து தெரிவித்திருந்தனர்.

இதைத் தொடர்ந்து, முதல்வர் ஸ்டாலினிடம் 165 பக்க அறிக்கையை நீதிபதி ஏ.கே.ராஜன் குழுவினர் கடந்த ஜூலை 14-ம் தேதிசமர்ப்பித்தனர்.

இந்நிலையில், நீதிபதி ஏ.கே.ராஜன் குழு அறிக்கையை தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ளது. அதில் உள்ள முக்கிய அம்சங்கள், பரிந்துரைகள் வருமாறு:

கட்டமைப்பு பாதிக்கப்படும்

l மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு இன்னும் ஒருசிலஆண்டுகள் தொடர்ந்து நடந்தால், தமிழக சுகாதார கட்டமைப்பு கடுமையாக பாதிக்கப்படும். ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு தேவையான மருத்துவர்கள் பற்றாக்குறைஏற்படும். அரசு மருத்துவமனைகளில் பணியாற்ற மருத்துவ நிபுணர்கள் போதிய அளவில் கிடைக்க மாட்டார்கள். கிராமப்புற,நகர்ப்புற ஏழை, எளிய மாணவர்களால் மருத்துவப் படிப்பில் சேரமுடியாத சூழல் ஏற்படும். மொத்தத்தில், நாடு சுதந்திரம் அடைவதற்குமுந்தைய நிலைக்கு தமிழகம் திரும்பலாம். சுகாதார கட்டமைப்புதரவரிசையில் பிற மாநிலங்களுக்கு கீழ் தமிழகம் செல்லும் நிலையும் ஏற்படலாம்.

l நீட் தேர்வை நீக்குவதற்கானசட்டப்பூர்வ நடவடிக்கைகளை அரசு உடனே மேற்கொள்ளலாம்.

l இந்திய மருத்துவ கவுன்சில் கட்டுப்பாட்டில் உள்ள தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவபல்கலைக்கழகத்தின் இணைப்புக் கல்லூரிகளில் உள்ள மருத்துவஇடங்கள் மருத்துவ கவுன்சிலின்சட்டதிட்டப்படிதான் நிரப்பப்பட வேண்டும் என்று சட்ட விதிகள்,அரசியல் சட்டக் கூறுகளை பயன்படுத்தி நடவடிக்கை எடுக்கலாம்.

l 2007-ல் கொண்டுவரப்பட்ட நுழைவுத்தேர்வு ரத்து சட்டம் போல,நீட் தேர்வை ரத்துசெய்யும் வகையிலும் சட்டம் இயற்றி, குடியரசுத் தலைவரின் ஒப்புதலை பெறலாம்.

l சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ என நாடு முழுவதும் வெவ்வேறு வகையான பாடத்திட்டங்கள் உள்ள நிலையில், தமிழகத்தில் மாநில பாடத்திட்டம், பாடங்கள், கற்பித்தல், தேர்வு மதிப்பீட்டு முறைகளை மேம்படுத்துவது அவசியம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

நீட் தேர்வுக்கு முன்பு அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்த மாணவர்களின் குடும்ப நிலை, சமூக, பொருளாதார நிலை, படித்த பள்ளிகள் விவரம் போன்றவையும்,நீட் தேர்வுக்கு பிறகு மருத்துவப் படிப்பில் சேர்ந்த மாணவர்களின் நிலையும் இந்த அறிக்கையில் புள்ளிவிவரங்களுடன் குறிப்பிடப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x