விரைவு ரயில்கள் சேவையில் மாற்றம்

விரைவு ரயில்கள் சேவையில் மாற்றம்
Updated on
1 min read

தெற்கு ரயில்வே சென்னை கோட்டம் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

மதுராந்தகம் பகுதியில் வரும் 22-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன.

இதனால், மதுரை-சென்னை எழும்பூர் விரைவு ரயில் (02636) விழுப்புரம் வரை மட்டுமே இயக்கப்படும். சென்னை எழும்பூர்- காரைக்குடி (02605) பல்லவன் விரைவு ரயில் விழுப்புரத்தில் இருந்து காலை 6.10 மணிக்கு இயக்கப்படும்.

புதுச்சேரி-டெல்லி விரைவு ரயில் (04071) மேற்கண்ட நாட்களில் விழுப்புரம், காட்பாடி, சென்னை பெரம்பூர், கூடூர் வழியாக இயக்கப்படும். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in