

கட்சி எல்லைகளைத் தாண்டி அனைவரும் பத்து நாட்களுக்குள் தடுப்பூசி போட்டுக்கொள்ளும் பணியை எம்எல்ஏக்கள் செயல்படுத்த வேண்டும் என புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை அறிவுறுத்தி உள்ளார்.
புதுச்சேரி மாநிலத்தில் கரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு தடுப்பூசி முகாம்களை தொடர்ந்து நடத்தி வருகிறது. இந்நிலையில் வீடு வீடாக சென்று தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியுள்ளது. இப்பணியை ஆளுநர் தமிழிசை நேரடியாக சென்று ஆய்வு செய்தார்.
புதுச்சேரி கருவடிக்குப்பம் பகுதியில் உள்ள பிள்ளையார் கோயில் வீதியில் வீடு, வீடாக சென்று தடுப்பூசி செலுத்தும் பணியை பார்த்தார். தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு இனிப்பு வழங்கி வாழ்த்து தெரி வித்தார்.
அதைத்தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “புதுச்சேரியில் உள்ள அரசு மருத்துவமனைகளை உலகத்தரம் வாய்ந்த மருத்துவமனைகளாக மாற்ற அரசு முயற்சி எடுத் துள்ளது. ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் டாக்டர்கள், செவிலியர்கள், நோயாளிகளை சந்தித்து குறைகளை கேட்டேன். குறைபாடுகள் சரி செய்யப்படும். ஸ்கேன் வசதி, காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும். ஏழைகள் எவ்வித தடையுமின்றி சிகிச்சை பெற அனைத்து துறைகளும் மேம்படுத்தப்படும். அனைத்து தொகுதி எம்எல்ஏக்களுக்கும் தடுப்பூசி போட மருத்துவக் குழுக் கள் தரப்பட்டுள்ளன.
தடுப்பூசி முகாம்களை எம்எல்ஏக்கள் முன்னெடுத்து நடத்த வேண்டும். கட்சி எல்லைகளைத் தாண்டி தங்களின் தொகுதியில் உள்ள அனைவரும் பத்து நாட்களுக்குள் தடுப்பூசி போட்டுக்கொள்ளும் பணியை எம்எல்ஏக்கள் செயல்படுத்த வேண்டும். வீடு வீடாக கணக்கெடுப்பு நடத்ததொடங்கியுள்ளோம். மக்கள் பாதுகாப்புக்காகவே இவ்விஷயங் களை கட்டாயப்படுத்துகிறோம். தடுப்பூசி போடாவிட்டால் நோய் வாய்ப்பட்டு பின்விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும். தடுப் பூசி போடாதவரே அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்படுகின்றனர். கரோனா பரிசோதனை குறைக்கப்படவில்லை. சோதனை முடிவுகள் உடன் தரப்படுகின்றன” என்று குறிப்பிட்டார்.