

அரசு மருத்துவமனைகளில் நோயா ளிகளுடன் தங்கி கவனிக்கும் உதவியாளர், பார்வையாளர்கள் கரோனா தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு விரை வில் அமலுக்கு வருகிறது.
மதுரை அரசு மருத்துவ மனையில் நாளொன்றுக்கு 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வெளி நோயாளிகள், 3,500-க்கும் மேற் பட்ட உள் நோயாளிகள் சிகிச் சைக்கு வருகிறார்கள். அவர்களில் பெரும்பாலானோர், தடுப்பூசி போடாமல் இருக்கிறார்கள். இதேநிலைதான், மற்ற அரசு மருத்துவமனைகளில் உள்ளன.
அதனால், அறுவை சிகிச்சை களுக்கு முன்பு எப்படி கரோனா பரிசோதனை முக்கியமோ அதுபோல் அரசு மருத்துவ மனைகளுக்கு நோயாளிக ளுடன் தங்கியிருக்கும் உதவி யாளர்களுக்கும், பார்வை யாளர்களுக்கும் தடுப்பூசி கட் டாயம் போட வேண்டும் என்ற கட்டுப்பாடு கொண்டுவர சுகாதா ரத்துறை முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இதற்காக மதுரை அரசு மருத்துவமனையில் நோயாளி களுடன் தங்கியிருக்கும் உதவி யாளர்கள், அவர்களை பார்க்க வரும் பார்வையாளர்கள் தடுப்பூசி போடுவதற்காக சிறப்பு கரோனா தடுப்பூசி மையம் தற்போது தொடங்கப்பட்டுள்ளது.
விரைவில் ஒவ்வொரு வார்டுக்கும் கரோனா தடுப்பூசி களை மருத்துவக் குழுவினர் எடுத்துச்சென்று நோயாளிகளுடன் தங்கியிருப்பவர்களுக்கும், பார்வையாளர்களுக்கும் தடுப்பூசி போட நடமாடும் தடுப்பூசி இயக்கம் தொடங்கப்பட உள்ளது.
இதுகுறித்து அரசு மருத்துவமனை மருத்துவர்கள் கூறு கையில், ‘‘அரசு ராஜாஜி மருத்துவமனை சீமாங் கட்டிடத்தில் தொடங்கப்பட்டுள்ள உதவியாளர்கள், பார்வையாளர் களுக்கான தடுப்பூசி மையத்தில் வார்டுகளில் உள்ள மருத்துவக் குழுவினரே, நோயாளிகளுடன் இருக்கும் உதவியாளர்கள், பார்வையாளர்களை கவுன்சலிங் செய்து, தடுப்பூசி போட வைக்கின்றனர்.
தற்போது முதற்கட்டமாக இந்த மையத்தில் 100-க்கும் மேற்பட்டோர் தினசரி தடுப்பூசி செலுத்துகின்றனர். மொபைல் தடுப்பூசி இயக்கத்தால் அரசு மருத்துவமனை வளாகத்துக்கு வருவோர் 100 சதவீதம் தடுப்பூசி போட்டிருக்கும் சூழல் உருவாகும்.
தற்போது நோயாளிகளுடன் தங்கியிருக்கும் உதவியாளர்கள், பார்வையாளர்களால் அரசு மருத்துவமனைகளில் கரோனா பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதைத் தடுக்க அரசு மருத்துவ மனைகள் சார்பில் சுகாதாரத் துறைக்கு உதவியாளர்கள், பார்வையாளர்கள் கட்டாயம் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் என்ற கட்டுப்பாடுகளை விதிக்க கோரிக்கை முன் வைக்கப்பட் டுள்ளது.
இந்த நடைமுறையை விரை வில் அரசு மருத்துவமனையில் செயல்படுத்த சுகாதாரத்துறை தீவிரமாக ஆலோசித்து வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.