அதிமுகவில் விருப்ப மனு அளிப்பது இன்றுடன் முடிகிறது

அதிமுகவில் விருப்ப மனு அளிப்பது இன்றுடன் முடிகிறது
Updated on
1 min read

அதிமுகவில் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடு வதற்கான விருப்ப மனு அளிப்பது இன்றுடன் முடிகிறது.

தமிழக சட்டப் பேரவைக்கான பொதுத்தேர்தல் ஏப்ரல் அல்லது மே மாதம் நடத்தப்படும் என தெரி கிறது. தேர்தலை முன்னிட்டு, ஆளுங்கட்சியான அதிமுக சார்பில், போட்டியிட விரும்புவோரிடம் இருந்து விருப்ப மனுக்கள் பெறப்பட்டு வருகின்றன. முதலில் 3-ம் தேதி வரை விருப்ப மனுக்கள் பெறப்படும் என அறிவிக்கப்பட்டது. மனுக்கள் அளிப்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்ததால், விருப்ப மனுக்கள் 6-ம் தேதி வரை பெறப்படும் என, அக்கட்சியின் பொதுச் செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா அறிவித்தார். இதையடுத்து, மனுக்களை வழங்குவது மற்றும் பூர்த்தி செய்யப்பட்டு திரும்பப் பெறுவது ஆகியவை இன்று (6-ம் தேதி) மாலை 5 மணியுடன் முடிகிறது. நேற்று மாலை வரை 24 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விருப்ப மனுக்களை பெற்றுள்ளதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவித்தன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in