Published : 20 Sep 2021 03:19 AM
Last Updated : 20 Sep 2021 03:19 AM

தமிழகத்தில் அக்டோபர் மாதத்துக்குள் அனைவருக்கும் முதல் தவணை தடுப்பூசி: சுகாதாரத் துறை செயலாளர் தகவல்

அக்டோபர் மாதத்துக்குள் தமிழகத்தில் அனைவருக்கும் முதல் தவணை தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறைச் செயலாளர் ஜெ.ராதா கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சென்னை அரசு பொது மருத்துவமனையில் நேற்று நடைபெற்ற கரோனா தடுப்பூசிமுகாமை, சுகாதாரத் துறைச்செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார். மருத்துவமனை டீன் தேரணிராஜன் உடன் இருந்தார். பின்னர்செய்தியாளர்களிடம் ஜெ.ராதாகிருஷ்ணன் கூறியதாவது:

தமிழகத்தில் அரசு தரப்பில் இதுவரை 3.97 கோடி தடுப்பூசிகள், தனியார் மருத்துவமனைகள் மூலம் 74 லட்சம் தடுப்பூசிகள் என மொத்தமாக 4.2 கோடி தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கக் கூடிய தூத்துக்குடி, கடலூர் நெல்லை, திருப்பத்தூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்கள், கேரள மாநில எல்லைகளை ஒட்டியுள்ள மாவட்டங்களில் கூடுதல்கவனம் செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மொத்த பாதிப்பு 5 சதவீதத்துக்கும் கீழ் உள்ளது. தஞ்சைஉள்ளிட்ட டெல்டா மாவட்டங்களிலும் கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் சென்னை சுற்றி இருக்கக் கூடிய சிலபகுதிகளில் கடந்த சில தினங்களாக தொற்று அதிகரித்துள்ளது. இதனை கட்டுப்படுத்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அடுத்த 6 வாரங்களில் தீவிர தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றுவதன் மூலம் தொற்றை முழுமையாக தடுக்க முடியும். அக்டோபர் மாதத்துக்குள் தமிழகத்தில் அனைவருக்கும் முதல் தவணை தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் தெரி வித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x