அனைத்து மத நம்பிக்கைகளை அறிவியலை வைத்து ஆராய முடியாது: உயர் நீதிமன்ற நீதிபதிகள் கருத்து

அனைத்து மத நம்பிக்கைகளை அறிவியலை வைத்து ஆராய முடியாது: உயர் நீதிமன்ற நீதிபதிகள் கருத்து
Updated on
1 min read

அனைத்து மத நம்பிக்கைகளையும் அறிவியலை வைத்து ஆராய முடியாது. சில நம்பிக்கைகளை நம் பிக்கையாகவே விடுவது நல்லது’ என உயர் நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

ராமநாதபுரம் வழக்கறிஞர் முருகன், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

ராமநாதபுரம் மாவட்டம், உத்தர கோசமங்கையில் 3,300 ஆண்டுகள் பழமையான மங்களநாத சுவாமி கோயில் உள்ளது. இக்கோயில் மூலவர் மரகத நடராஜர் ஆண்டு முழுவதும் சந்தனக் காப்புடன் பக்தர்களுக்கு காட்சி தருகிறார். ஆருத்ரா தரிசனம் அன்று மட்டும் மரகத நடராஜர் சந்தனக் காப்பு இல்லாமல் காட்சியளிப்பார். இதனால், நடராஜர் சிலை, உண்மையில் மரகதத்தால் செய் யப்பட்டதா என்பதை ஆய்வு செய்ய அறநிலையத் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது. இதை விசாரித்து நீதிபதிகள் வி.ராமசுப்பிரமணியன், என்.கிரு பாகரன் ஆகியோர் பிறப்பித்த உத்தரவு:

அனைத்து மத நம்பிக்கைக ளையும் அறிவியலை பயன்படுத்தி ஆராய்ந்து கொண்டிருக்க முடி யாது. சில நம்பிக்கைகளை நம்பிக்கையாகவே இருக்க விடுவது நல்லது. மனுதாரர் மரகத நடராஜர் சிலை உண்மையில் மரகத்தால் செய்யப்பட்டது என நம்பினால் நம்பலாம். அவருக்கு அந்த நம்பிக்கை இல்லாவிட்டால், அவர் கோயிலுக்கு செல்வதை நிறுத்திக்கொள்வது நல்லது.

மனுதாரர் மரகத நடராஜர் சிலையை உடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த மனுவை தாக்கல் செய்திருப்பதாக நாங்கள் கருதுகிறோம். ஏனெனில் ஒரு சிலையை உடைக்காமல் அந்த சிலை குறித்து ஆய்வு செய்ய முடியாது. அப்படி சிலை உடைக்கப்பட்டால் அந்த சிலை வழிபாட்டுக்கு தகுதியற்றதாகி விடும். மனுதாரர் இப்படிப்பட்ட தவறான உள்நோக்கத்துடன் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.

உத்தரகோசமங்கை கோயி லுக்கு கோடிக்கணக்கான பக் தர்கள் வருகின்றனர். அவர்களின் நம்பிக்கையை கெடுக்கும் செயல்களை செய்வது சரியல்ல. மரகத நடராஜர் ஆண்டுதோறும் சந்தனக் காப்பில் இருப்பதை பெரிய பிரச்சினையாக்கி, அதை சரிசெய்ய சிலையை ஆய்வு செய்ய வேண்டும் என்று கூறுவதை ஏற்க முடியாது.

இந்த மனுவை ரூ.1 லட்சம் அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும். ஆனால், சுய கட்டுப்பாடு காரணமாக மனுதார ருக்கு அபராதம் விதிக்காமல் விட்டுவிடுகிறோம். மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என நீதிபதிகள் கூறியுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in