

செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு பங்காரு அடிகளார் மனைவி லட்சுமி பங்காரு அடிகளார் மனு தாக்கல் செய்துள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம், மேல்மருவத்தூரில் ஆதிபராசக்தி சித்தர் பீடம் உள்ளது. இது இந்த ஊரின் அடையாளமாக உள்ளது.
இந்த சித்தர் பீடத்தை நிறுவிய பங்காரு அடிகளார் மனைவி லட்சுமி பங்காரு அடிகளார் மேல்மருவத்தூர் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். மாற்று வேட்பாளராக பங்காரு அடிகளாரின் மகன் செந்தில்குமார் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.
கடந்த 10 ஆண்டுகளாக மேல்மருவத்தூர் ஊராட்சி மன்றத் தலைவர் பதவி தாழ்த்தப்பட்டோருக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. இந்தத் தேர்தலில் பொதுத் தொகுதியாக மாறியதைத் தொடர்ந்து பங்காரு அடிகளார் மனைவி வேட்புமனு தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.