Published : 15 Feb 2016 09:15 AM
Last Updated : 15 Feb 2016 09:15 AM

ரூ.1,002 கோடியில் மேம்பாலங்களுக்கு அடிக்கல்: புதிய பாலங்கள், பயணியர் மாளிகைகள் முதல்வர் ஜெயலலிதா திறந்துவைத்தார்

தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் ரூ.675.42 கோடியில் கட்டப்பட்ட மேம்பாலங்கள், கட்டிடங்களை காணொலி காட்சி மூலம் திறந்து வைத்த முதல்வர் ஜெய லலிதா, ரூ.1,002 கோடி மதிப்பில் கட்டப்படவுள்ள மேம்பாலங் களுக்கு அடிக்கல் நாட்டினார்.

இது தொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப் பில் கூறியிருப்பதாவது:

பொதுமக்கள், சுற்றுலாப் பயணி களின் வசதிக்காக ரங்கத்தில் ரூ.75 கோடியே 47 லட்சம் மதிப் பில் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே 792 மீட்டர் நீளத்தில் புதிய பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த பாலத்தை தலைமைச் செயலகத்தில் இருந்து முதல்வர் ஜெயலலிதா நேற்று காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். காஞ்சிபுரம் மாவட்டம் கிழக்கு கடற்கரை சாலையில், வாயலூர் அருகே ரூ.105 கோடியே 20 லட்சம் மதிப்பில் பாலாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள நான்கு வழித்தட பாலத்தையும் முதல்வர் திறந்துவைத்தார்.

இதுதவிர, திருவண்ணாமலை மாவட்டம் கடுகனூர், சேலத்தில் எடப்பாடி, பாப்பம்பாடி உள்ளிட்ட 6 பகுதிகள், நாமக்கல்லில் எருமப் பட்டி, ஈரோட்டில் அண்ணாநகர் உட்பட 3 இடங்களில் பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. தருமபுரியில் காட்டாற்றின் குறுக்கிலும், நாமக்கல் மோகனூர் மற்றும் கரூர் வாங்கல் இடையிலும், கரூர் நொய்யல் ஆற்றின் குறுக்கிலும் பாலங்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.

கோவையில் தோளம்பாளை யம், சொக்கனூர், ரத்தினபுரி, திருச்சி ஓடத்துறையில் பாலங்கள், ரயில்வே மேம்பாலங்கள், திருப்பூரில் செங் காட்டுச்சாலை, தஞ்சையில் ஒக்கநாடு, தென்னமநாடு, திருவா ரூரில் சோளக்குறிச்சி, பேரையூர், விளாத்தூர், செட்டிச்சத்திரம், நாகையில் சத்திரப்பாடி, ஓதவந் தான்குடி, தேனியில் அம்மச்சியா புரம், முதலக்கம்பட்டி, நெல்லை மாவட்டம் சித்தூரில் நம்பியாற்றின் குறுக்கில், குறுங்காவனம் மற்றும் தெற்கு மலையட்டிப்பட்டி ஆகிய இடங்களில் பாலங்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.

தூத்துக்குடி ஊத்துப்பட்டி, ஓசனூத்து, டி.சுப்பையாபுரம் மற்றும் ஏரலில் தாமிரபரணி ஆற் றின் குறுக்கேயும், விருதுநகர் சுத்தமடம், சிவகங்கை பாவாகுடி, சில்லாம்பட்டி, ராமநாதபுரம் மண குடி, கன்னியாகுமரி மாவட்டம் திக் குறிச்சியில் தாமிரபரணி ஆற்றின் குறுக்கிலும் பாலங்கள் கட்டப்பட் டுள்ளன.

திருவள்ளூர் மாவட்டத்தில், ரூ.188 கோடியில் எண்ணூர் துறை முக இணைப்புச்சாலை, நாமக்கல் ராசிபுரத்தில் ரூ.23 கோடியே 80 லட்சத்தில் 6 கி.மீ. நீளத்தில் ராசிபுரம் புறவழிச்சாலை ஆகியவையும் அமைக்கப்பட்டுள்ளன. சென்னை சைதாப்பேட்டையில் ரூ.38 கோடியே 30 லட்சத்தில் ஒருங்கி ணைந்த தலைமைப் பொறியாளர் அலுவலகம், செங்கல்பட்டு, கள்ளக் குறிச்சியில் தரக்கட்டுப்பாட்டு உள் கோட்ட அலுவலகங்கள், தஞ்சை செங்கிப்பட்டி, ஒரத்தநாடு, சேலம் தலைவாசல் ஆகிய இடங் களில் பயணியர் மாளிகைகள், தூத்துக்குடியில் பிரிவு அலுவலகங் கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.

தமிழகம் முழுவதும் மொத்தம் ரூ.675 கோடியே 42 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள 43 பாலங்கள், 2 ரயில்வே மேம்பாலங்கள், 2 சாலைகள், அலுவலகம் மற்றும் பயணியர் மாளிகைகளை முதல்வர் ஜெயலலிதா திறந்துவைத்தார்.

புதிய மேம்பாலங்கள்

சென்னை கோயம்பேடு புறநகர் பேருந்து நிலைய, நகர்ப்புறபுற பேருந்து நுழைவு வாயில் - காளியம்மன் கோயில் சந்திப்பில் ரூ.93 கோடியே 50 லட்சத்தில் மேம் பாலம், வேளச்சேரி விஜயநகரம் பேருந்து நிலையம் அருகில் ரூ.8 கோடியில் மேம்பாலம், காஞ்சிபுரம் மாவட்டம் மேடவாக்கத்தில் ரூ.146 கோடியே 41 லட்சத்தில் மேம்பாலம், சேலம் மாநகரில் ஐந்து சாலை கள் சந்திப்பில் ரூ.320 கோடியில் இரண்டு அடுக்கு சாலை மேம் பாலம் ஆகியவற்றை கட்ட நெடுஞ் சாலைத்துறை திட்டமிட்டுள்ளது.

இத்துடன் விழுப்புரம், திருவா ரூர், கடலூர், திருவள்ளூர், கோவை, வேலூர், திண்டுக்கல், தஞ்சை, சேலம், தேனி ஆகிய பகுதிகளில் மொத்தம் ரூ.1,002 கோடியே 2 லட்சம் மதிப்பில் 5 பாலங்கள், 5 ரயில்வே மேம்பாலங்கள், 4 மேம்பாலங்கள் கட்டப்பட உள்ளன. 4 சாலைகள் புதிதாக அமைக்கப்பட உள்ளன. இவற்றுக்கு முதல்வர் ஜெயலலிதா காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார்.

இந்நிகழ்ச்சியில், அமைச்சர் எடப்பாடி கே.பழனிச்சாமி, அரசு தலைமை கொறடா ஆர்.மனோ கரன், தலைமைச் செயலாளர் கு.ஞானதேசிகன், அரசு ஆலோ சகர் ஷீலா பாலகிருஷ்ணன், துறை செயலாளர் ராஜீவ் ரஞ்சன், நெடுஞ் சாலைத்துறை இயக்குநர் கோ.அர.ராஜேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இவ்வாறு அரசு செய்திக்குறிப் பில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x