

சிவகங்கையில் நேற்று 14 இடங்களில் கரோனா தடுப்பூசி முகாம் நடந்தது. இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வீடு, வீடாகத் துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டன. இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின், முன்னாள் முதல்வர் கருணாநிதி படங்கள் இடம் பெற்றிருந்தன. ஆனால் பிரதமர் புகைப்படம் இல்லை.
கரோனா தடுப்பூசிகளை இலவசமாக மத்திய அரசு வழங்கி வரும்நிலையில், பிரதமர் படம் இடம் பெறாததைக் கண்டித்து, சிவகங்கை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள சுகாதாரத் துணை இயக்குநர் அலுவலகத்தை பாஜக மாவட்டத் தலைவர் மேப்பல் சக்தி தலைமையில் அக்கட்சியினர் முற்றுகையிட்டு, துணை இயக்குநர் ராம்கணேஷிடம் வாக்குவாதம் செய்தனர். பின்னர் மறியலில் ஈடுபட்டனர். அவர்களை வட்டாட்சியர் தர்மலிங்கம், இன்ஸ் பெக்டர் சுரேஷ்குமார் சமாதானம் செய்தனர். பின்னர் அவர்கள் கலைந்துசென்றனர்.