

மாநில நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சரும், திமுக முதன்மைச் செயலாளருமான கே.என்.நேரு திருச்சியில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியது:
ஊரக உள்ளாட்சித் தேர்தல் உறுதியாக நடத்தப்படும். விடுபட்ட 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தலை ஒரேகட்டமாக நடத்த வேண்டும் என்று நீதிமன்றத்தில் அதிமுக வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கில் நீதிமன்றம் கூறுவதற்கேற்ப தேர்தல் நடத்தப்படும். ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிந்த பிறகு, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும். அதற்கான பணிகளும் தொடங்கப்பட்டுள்ளன. திமுக கூட்டணியில் எந்த விரிசலும் இல்லை. அனைவரும் ஒன்றாக இருந்து, தேர்தலில் வெற்றி பெறுவோம் என தெரிவித்தார்.