

தமிழகத்தில் இருந்து டெல்லி, ஹரித்வார், ஜெய்பூருக்கு செல்ல ஆன்மிக சுற்றுலாவை ஐஆர்சிடிசி அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக ஐஆர்சிடிசி நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
கரோனா பாதிப்பு குறைந்து வருவதால், மக்களின் தேவைக்கு ஏற்றார்போல், பல்வேறு இடங்களுக்கு ஐஆர்சிடிசி சார்பில் சுற்றுலா ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், தமிழகத்தில் இருந்து டெல்லி, உத்தரப்பிரதேசம், ஹரித்வார், ஜெய்பூர்ஆகிய ஆன்மிக இடங்களுக்குச்செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள் ளது.
இந்த சுற்றுலா ரயில் அக்.18-ம்தேதி மதுரையில் இருந்து புறப்பட்டு, திண்டுக்கல், திருச்சி, விழுப்புரம், சென்னை வழியாகச் செல்கிறது. டெல்லி உள்ளூர், உத்தரப்பிரதேசத்தில் மதுரா கிருஷ்ண ஜென்மபூமி, ஹரித்வாரில் மானசாதேவி, ஜெய்ப்பூர் கோட்டைகள் மற்றும் ஜம்மு காஷ்மீர் கட்ராவைஷ்ணவ்தேவி கோயிலைத்தரிசிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள் ளது.
பயணக் கட்டணம் ரூ.11,340
மொத்தம் 12 நாட்கள் கொண்ட இந்த சுற்றுலாவுக்கு ரூ.11,340 கட்டணமாகும். இதில், ரயில் பயணக் கட்டணம், தங்கும் வசதி, வாகனப்போக்குவரத்து, சைவ உணவு ஆகியவை அடங்கும். கரோனா தடுப்பூசி 2 தவணைகள் செலுத்தியிருக்க வேணடும். இந்த சுற்றுலா தொடர்பாக மேலும் தகவலுக்கு 9003140680, 8287931977 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.